இயற்கை விவசாயம் பீர்க்கங்காய் சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!
பீர்க்கங்காய் வெள்ளரிக்காய் இனத்தை சேர்ந்தது. காய்கறி வகையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது பீர்க்கங்காய். ஒரு கொடி வகையான இந்தப் பயிரின் வளர்ச்சிக்கு பந்தல் அமைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
பீர்க்கங்காயை குறைந்த முதலீட்டில் பயிரிட்டு, ஒரு ஏக்கருக்கு 20 டன் வரை மகசூல் பெற்று அதிக லாபம் பெற முடியும்.
மல்லிகை பூ சாகுபடி முறைகள்..! |
சரி வாங்க இன்று இயற்கை விவசாயம் பகுதியில் பீர்க்கங்காய் சாகுபடி முறை பற்றி படித்தறிவோம் வாங்க..!
இரகங்கள்:
பீர்க்கங்காய் சாகுபடி பொறுத்தவரை கோ 1, கோ 2, பி.கே.எம் 1 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது.
நிலம்:
பீர்க்கங்காய் சாகுபடி பொறுத்தவரை மண் பாங்கான தண்ணீர் தேங்காத அனைத்து வகை நிலங்களிலும் நன்றாக விளையக்கூடியது.
தட்பவெப்ப நிலை:
பீர்க்கங்காய் சாகுபடி பொறுத்தவரை மழைக் காலங்களிலும் சாகுபடி செய்யலாம். கோடைக் காலங்களில் வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரையிலுள்ள மண் ஏற்றது.
நிலம் மேலாண்மை:-
பீர்க்கங்காய் சாகுபடி பொறுத்தவரை நிலத்தை 3 முதல் 4 முறை நன்றாக உழுது 2.5 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ. அகலமுள்ள வாய்க்கால்களை எடுத்து நிலத்தை தயார் படுத்தவேண்டும்.
பின்பு வாய்க்காலில் 45 செ.மீ. ஆழம், அகலம், நீளமுள்ள குழிகளை 1.5 செ.மீ. இடைவெளியில் எடுத்து, அதில் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்தை மேல் மண்ணுடன் சேர்த்து இட்டு நடவுக் குழி தயார் செய்ய வேண்டும்.
பருவகாலம்:
ஜனவரி, ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்கள் பருவ காலமாக உள்ளது. நாற்று ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் நன்றாக படர்கிறது.
அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!! |
விதை நேர்த்தி:-
பீர்க்கங்காய் சாகுபடி பொறுத்தவரை 1.50 கிலோ முதல் 2 கிலோ வரை விதை தேவைப்படும். ஒரு குழிக்கு 5 விதைகள் ஊன்ற வேண்டும். முளைத்தவுடன் நன்கு வளர்ந்த 3 செடிகளை மட்டும் விட்டு மற்ற செடிகளைப் பிடுங்கி எடுக்க வேண்டும்.
நீர் மேலாண்மை:
விதை ஊன்றியவுடன் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு நாற்றுகள் நன்றாக வளர்ந்தவுடன், வாய்க்கால் மூலம் 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மேலும் இவற்றில் கொடி வளர்ந்தவுடன் பந்தல் போட்டு கொடியைப் படர விட வேண்டும்.
பின்பு எத்ரல் எனும் வளர்ச்சி ஊக்கியை 250 பிபிஎம் என்ற அளவில் இரண்டு இலைப் பருவத்தில் தெளிப்பதால் பெண் பூக்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை மீண்டும் 7 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
விதை ஊன்றிய 30 நாள் கழித்து 50 கிலோ யூரியாவை மேலுரமாக இட்டு மண் அணைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்
உர மேலாண்மை:-
பீர்க்கங்காய் சாகுபடி பொறுத்தவரை உரங்களாக 250:100:100 கிகி என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை பயிரின் காலம் முழுவதும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
செண்டு மல்லி பூ சாகுபடி முறை..! |
களை நிர்வாகம்:
களையைக் கட்டுப்படுத்த மண்வெட்டி கொண்டு மூன்று முறை களையெடுக்க வேண்டும். 2 மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை அடைய தாவரத்திற்கு சுமை தாங்கிகளை அமைக்க வேண்டும். விதைத்த 15 நாட்களுக்குப் பிறகு எத்தரால் 250 பி.பி.எம் (2.5 மிலி /10 லி நீர்) வார இடைவெளியில் நான்கு முறை அளிக்க வேண்டும்.
அறுவடை:
முதல் அறுவடை விதைத்த 50 முதல் 60 நாட்களில் அறுவடை செய்யலாம். அதைத் தொடர்ந்து ஒரு வார இடைவெளியில் 10 முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
மகசூல்:-
இந்த முறையில் பீர்க்கங்காய் சாகுபடி செய்தால் ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 டன் வரை பீர்க்கங்காய் மகசூலாக பெறலாம்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்..! |