How To Grow Nandiyavattai Plant in Tamil
அன்பு உள்ளம் கொண்ட உறவுகளுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அடுக்கு நந்தியாவட்டை பூச்செடி வீட்டில் வளர்ப்பது எப்படி என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். அனைவருக்குமே வீட்டில் அழகான பூச்செடிகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல நந்தியாவட்டை பூ பற்றி உங்களுக்கு தெரியும்.
இந்த நந்தியாவட்டை பூச்செடியை வீட்டில் வைத்து வளர்த்தால் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இதன் பூக்கள் வெண்மையான நிறத்தில் பார்ப்பதற்கு ரோஜா மலர் போல இருக்கும். அதுபோல இந்த செடியை உங்கள் வீட்டில் வளர்க்க ஆசைப்படுகிறீர்களா..? அப்போ இந்த பதிவை படித்து நந்தியாவட்டை செடி வளர்க்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்..!
விதையின் மூலம் சாமந்தி பூ செடி வளர்ப்பது எப்படி..? |
நந்தியாவட்டை செடி வளர்ப்பு:
- நந்தியாவட்டை செடி வளர்ப்பதற்கு முதலில் ஒரு தொட்டியில் பாதி அளவிற்கு செம்மண்ணை போட வேண்டும். பின் அதன் மேல் மாட்டு எரு உரத்தை போட்டு மண்ணை கலந்து விட வேண்டும்.
- பின் அதில் பதியம் போட்ட நந்தியாவட்டம் குச்சியை நடவேண்டும். நந்தியாவட்டம் செடியை நடுவதற்கு முன் அந்த குழியில் மாட்டு சாணம் மற்றும் தேங்காய் நாரை வைத்து, அதன் மேல் இந்த குச்சியை வைத்து நட வேண்டும்.
- மண்ணை நன்றாக மூடிய பின் அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- அடுத்து 5 அல்லது 7 நாட்களுக்குள் நந்தியாவட்டம் குச்சியில் இருந்து துளிர் வர ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் செடிக்கு போதிய அளவு மட்டுமே தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- செடி நன்கு வளர்ந்து வரும் வரை அதற்கு அதிகளவில் தண்ணீர் ஊற்றுவதை தவிர்ப்பது நல்லது. அதுபோல செடி நன்றாக வளர்ந்து வந்தவுடன் அதற்கு காலை மாலை என 2 வேளையும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- இந்த நந்தியாவட்டம் செடியை எப்பொழுதும் குளிர்ச்சி தன்மை இருக்கும் இடத்தில் வைத்து வளர்த்தால் செடி நன்றாக வளரும்.
- அதுபோல செடிகள் நன்றாக வளர்ந்து வந்தவுடன் அதற்கு தேவையான உரங்கள் போட வேண்டும். அப்போது தான் செடியில் முட்டுக்கள் அதிகமாக வரும். இந்த நந்தியாவட்டம் செடிக்கு எந்த உரம் வேண்டுமானாலும் போடலாம்.
மாடித்தோட்டத்தில் பன்னீர் ரோஜா கொத்து கொத்தாக பூக்க என்ன செய்ய வேண்டும்..! |
நந்தியாவட்டம் பூக்கள் பூக்க டிப்ஸ்:
- செடியில் சில முட்டுக்கள் வந்தவுடன், முட்டை ஓட்டை தூளாக செய்து, அந்த தூளை செடியின் அடிப்பகுதியில் இருக்கும் மண்ணை கிளறி விட்டு போடலாம்.
- அதுபோல காய்கறி கழிவுகளையும் இந்த செடிக்கு உரமாக போடலாம்.
- மாட்டு சாணத்தை தண்ணீரில் ஊறவைத்து. அந்த தண்ணீரை 2 நாட்களுக்கு ஒருமுறை செடிக்கு ஊற்றி வரலாம்.
- வெங்காயத்தோலை அரைத்து அதை நீரில் கலந்து அந்த நீரை செடிகளுக்கு ஊற்றலாம்.
- அதேபோல நாம் தூக்கி எரியும் வாழைப்பழ தோலையும் அரைத்து, தண்ணீரில் கலந்து அந்த நீரையும் செடிகளுக்கு ஊற்றி வரலாம்.
- வேப்பம் புண்ணாக்கு மற்றும் கடலை புண்ணாக்கு கரைசலை வாரத்திற்கு ஒரு முறை செடிகளுக்கு தெளித்து வரலாம். இப்படி செய்வதால் செடிகளை பூச்சிகள் தாக்காமல் இருக்கும்.
இதுபோன்ற செயல் முறைகளை பின் பற்றி வந்தால் செடிகள் நன்றாக வளர்ந்து நந்தியாவட்டம் பூக்களும் அதிகமாக பூக்கும். அதுமட்டுமில்லாமல், இந்த பூக்கள் கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்..! |
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |