உங்ககிட்ட இடம் இருக்கா? உடனே தயாராகுங்கள் நீங்களும் விவசாயிதான்..!

Advertisement

இயற்கை விவசாயம் பற்றிய தகவல்

நண்பர்களே வணக்கம் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு அதிகளவு ஆசை இருப்பது விவசாயி ஆக தான் ஆசை ஆனால் அதனை அவர்கள் வீட்டில் சொன்னால் அதெல்லாம் வேண்டாம் ஒழுங்கா படித்த படிப்பீர்க்கு வேலை செய்ய வழியை தேடிக்கொள் என்று சொல்லிவிடுவார்கள். காரணம் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் இருக்கும் நிலையை கண்டு பயந்து அதனை செய்யக ஆசை இருந்தாலும் செய்ய வேண்டாம் என்று மறுத்துவிடார்கள். அனைவரும் மறுத்துவிட்டால். பின் வரும் சந்ததினார்க்கு நம்முடைய விவசாயத்தையும் நாட்டையும் நமக்கு கிடைத்த மாதிரி அழகாக கொடுத்து செல்வது நம்முடைய கடமையாக கருதும் அனைவருக்கும் இந்த பதிவு முதல் வழியாக இருக்கும். வாங்க அதனை பற்றி தெளிவாக படித்தறிந்துகொள்வோம்.

விவசாயம் செய்யும் முறை:

விவசாயம் என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. விவசாயம்  என்பது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் ஒவ்வொன்றிலும் காணப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் விவசாயத்தின் ஒரு பகுதியாக இருப்பது என்பது நமக்கு மிகவும் பெருமையாக இருக்கும்.

ஒரு பகுதியாக இருக்கிறோமா? என்று கேட்டால் ஆம் அது தான் உண்மை. பொதுவாக நாம் விவசாயி என்றால் நெல் அறுவடை செய்தால் மட்டும் நம் விவசாயி அல்ல நாம் பயிரிட்டு விளையும் அனைத்துமே விவசாயம் தான்.

ஒரு சென்ட் விவசாயம் என்பது யாருக்கு தெரியும்? இன்று அதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். இந்த விவசாயத்தை அடி விவசாய முறை என்று சொல்லலாம்.

ஒரு சென்ட் விவசாயம் என்பது ஒரு ஏக்கர் உங்களிடையே உள்ளது அல்லது அதற்கும் சின்னதாக இடம் உள்ளது என்றால் அதிலும் நாம் அழகாக விவசாயம் செய்யலாம். பொதுவாக நெல் அறுவடை செய்தால் அதில் அதிகபட்சமாக நாம் நெல் அறுவடை செய்வோம் அதன் கூடவே உளுந்து அல்லது பயிர் அறுவடை செய்வோம் ஆனால் இந்த அடி விவசாயத்தில் நாம் அதிகபட்சமான காய்கறி, கீரை, சோளம் கரும்பு கூட அறுவடை செய்யலாம்.

ஒரு ஏக்கரில் விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவார்கள் கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் Five Layer Farming in Tamil

ஸ்டேப் -1

 one cent farming agriculture in tamil

முதலில் விவசாய நிலத்தில் உழுவை எடுத்து உழுவ வேண்டும். அதன் பின் அதில் இயற்கையாக கிடைக்கும் உரத்தை அதன் மீது போட்டு நன்கு சேர்த்துக்கொள்ளவும். இயற்கை உரம் என்பது ஆடு மாடு சாணம் கிடையாதது. மரங்கள் கீழ் அல்லது மக்கும் குப்பைகளை கொண்டு அந்த இடத்தில் கொட்டி கொள்ளவும்.

நான்கு அடி அகலத்தில் ஒரு அடி பாதை கொண்ட  80 அடி நீளம் கொண்ட ஒரு ஏக்கரில் 10 அல்லது 11  வகையான பயிர்களை பயிரிடலாம்.

ஸ்டேப் – 2

 one cent farming agriculture in tamil

ஒரு நீளத்தில் ஒவ்வொரு 1.1/2 அடிக்கு ஒரு கத்திரிக்காய் மிளகாய் இருக்கும். அடுத்த நீளம் முழுவதும் ஒரு தக்காளி வெண்டைக்காய் விதைக்கவேண்டும். ஏனென்றால் இதெல்லாம் செடி காய்கறிகள் ஆகும்.

இதற்கு இடையே தம்பட்டை அவரை, மக்காசோளம் பயிரிவார்கள். மக்காசோளத்துக்கு அதிகளவு நைட்ரஜன் சத்துக்கள் தேவை அதற்காக தம்பட்டை அவரை எடுத்துக்கொடுக்கும். அதற்காக மக்காசோளத்துக்கு பக்கத்தில் தம்பட்டை அவரை விதைப்பார்கள்.

இதற்கிடையே வெங்காயம், புளிச்சைக்கீரை அதற்கு அடுத்த நீளத்தில் பொன்னகன்னி கீரை விதைக்கலாம்.

மக்காசோளம் ஒரு அடிக்கு வளர்ந்த பிறகு மூக்குத்தி அவரை அதன் கூடவே சேர்த்து வளரவிட்டால் அது வளர்ந்து மக்காசோளத்தின் மேல் கொடியாக வளரும்.

இடம் இருக்கும் இடத்தில் கீரை விதையை போட்டால் அது நன்றாக வளர்ந்து வரும். இந்த கீரைகள் அனைத்தும் 30 நாட்களில் வளர்ந்து விடும் அதனை அறுவடை செய்த பின்

முள்ளங்கி, கேரட், பீட்ருட் என மழை காய்கறிகளை விதைக்க வேண்டும். ஏன் இதை விதைக்கவேண்டும் என்று கேட்டால். முதல் விதைத்த காய்கறிகள் அனைத்தும் வளர்ந்து செடிகள் அனைத்தும் மண் மீது வெயில் படாது அதனால் மழை காய்கறிகளை விதைக்க வேண்டும் என்கிறார்கள்.

இந்த மாதிரி ஏன் பயிரிடுகிறார்கள் என்று கேட்டால் இதில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான பூச்சிகள் மட்டும் வரும்.

எடுத்துக்காட்டாக:

ஒரு தக்காளி செடி வைத்தால் அதில் ஒரு வகையான பூச்சிகள் மட்டும் வரும் அப்படி அந்த பூச்சிக்கு பிடித்து விட்டால் அது அந்த செடியை விட்டு செல்லாமல் வளரவிடாமல் செய்துவிடும் அதே அந்த செடிகளின் பக்கத்தில் வெண்டைக்காய் செடி வைத்தால் அந்த பூச்சி தக்காளி செடியை நெருங்காது இதனால் எந்த செடிகளுக்கும் தனியாக மருந்துகள் அடிக்க தேவையில்லை.

பணப்பயிர்கள்:

இது போல் தொடர்ந்து பயிரிட்டு வந்தால் உங்களுக்கு மாதம் மாதம் ஒரு செடிகளுக்கு 6000/- ரூபாய் கிடைக்கும். நம் விதைத்த செடி ஒவ்வொறிற்கும் 6000/- ரூபாய் என்றால் லாபத்தை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> தெரிந்துகொள்ளுங்கள் 
Advertisement