பங்குனி மாதம் எந்த பயிர் சாகுபடி செய்யலாம்? | Panguni Matha Sagupadi Pattangal
Panguni Matha Sagupadi Pattangal – விவசாயம் நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் பங்குனி பட்டத்திற்க்கான பயிர் வகைகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்துவிட்டது. யாரும் விவசாயத்தில் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை. இதன் காரணமாகவே எந்த படத்தில் என்ன பயிர் செய்வது என்பதில் அதிக குழப்பம் இருக்கும். அவர்களுக்கு மட்டும் இல்லாமல். இனி வரும் காலங்களில் மக்கள் அனைவருமே விவசாயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அப்பொழுது விவசாயம் செய்ய இடம் இல்லாமல் அனைவருமே வீடுகளிலும், மாடிகளிலும் விவசாயம் செய்ய ஆரம்பிப்பார்கள், இன்னும் ஏன் இருக்கும் இடத்தை இடித்து விட்டுக்கூட விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். ஆக அவர்களுக்கெல்லாம் உதவும் வகையில் இன்று நாம் பங்குனி மாதம் எந்த பயிர் சாகுபடி செய்யலாம் என்பது குறித்து தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம்.
Which Plants are Cultivated in Panguni Tamil Season
வெண்டைக்காய்:
பங்குனி மாதனில் வெண்டை சாகுபடி செய்யலாம், நல்ல விளைச்சலை கொடுக்கும். இது குறுகிய கால பயிர் ஆகும். ஆக சாகுபடி செய்த குறுகிய காலத்திலேயே நல்ல வருமானத்தை பெறலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
காய்ந்த செடிகள் கூட 3 நாட்களில் துளிர்விடும்..! அதற்கு இந்த கரைசலை 1 கிளாஸ் ஊற்றுங்க போதும்..!
பாகற்காய்:
அதேபோல் பங்குனி மாதத்தில் பாகற்காய் சாகுபடி செய்யலாம். இந்த பாகற்காய் சாகுபடிக்கு எந்த ஒரு சீசனும் இல்லை. அனைத்து காலங்களிலும் சாகுபடி செய்யலாம். வெண்டை, கத்தரி போன்ற காய்கறிகளுக்கு நிலையான விலை இருக்கும் என்று நாம் உறுதியாக சொல்லமுடியாது, ஆனால் இந்த பாகற்காய்க்கு நிலையான விலை என்பது இருக்கும். சந்தையில் அதிக தேவை உள்ள காய்கறிகளில் பாகற்காய்க்கு இடம் உள்ளம் உள்ளது. இந்த சாகுபடிக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
கொத்தவரை:
பங்குனி மாதத்தில் கொத்தவரையும் சாகுபடி செய்யலாம், இந்த சாகுபடிக்கு அதிக நீர்ப்பாசனம் தேவைப்படாது, கொஞ்சம் ஈரப்பதம் இருந்தாலே போதும் கொத்தவரை நன்கு வளர்ந்து விளைச்சலை கொடுக்கும். இருப்பினும் பூச்சி தாக்குதல்கள் இருக்கும்.
செடி முருங்கை:
பங்குனி மாதத்தில் செடி முருங்கையும் அதிகமாக சாகுபடி செய்யலாம், இதற்கு நல்ல வருமானம் கிடைக்கும். முருங்கைக்காய் பொறுத்தவரை அனைத்து சீசன்களிலும் கிடைக்காது. வெயில் காலங்களில் மட்டும் தான் அதிகமாக கிடைக்கும். குறிப்பாக தென்மாவட்டங்களான திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களில் தான் இந்த செடி முருங்கை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தண்ணீர் வசதி இல்லாதவர்கள் இந்த செடி முருங்கை சாகுபடி செய்து நல்ல லாபம் பெறலாம்.
தனியா வகைகள்:
தனியா வகைகளான கம்பு, கேழ்வரகு, தினை, சோளம் போன்ற தனியா பயிர்களை சாகுபடி செய்ய மிகவும் என்றது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டிலேயே கிராம்பு செடி வளர்க்கும் முறை..!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |