ரோஜா செடி, மல்லிகை செடி, மட்டுமில்லை எல்லா பூச்செடியிலும் பூக்கள் பூத்து குலுங்க இதை செய்யுங்க

Advertisement

பூக்கள் அதிகமாக பூக்க என்ன செய்வது | What Fertilizer Makes Flowers Bloom in Tamil

நமது வீட்டை அழகுபடுத்துவதற்காக நிறைய பூச்செடிகளை வளர்ப்போம். சில நபர்கள் மாடித்தோட்டத்தில் பூச்செடிகள் வளர்ப்பார்கள், சில நபர்கள் வீட்டில் வெளிப்புறத்திலும் மண்ணில் தான் வளர்ப்பார்கள். சில வீட்டில் இடம் இல்லாததால் தொட்டியில் பூச்செடியை வளர்ப்பார்கள். எப்படி வளர்த்தாலும் சிலர் வீடுகளில் பூக்கள் பூத்து குலுங்கும். இன்னும் வீடுகளில் செடிகள் வளர்ந்திருக்கும் அதிலிருந்து பூக்கள் ஒன்று இரண்டு தான் பூக்கும். பூக்கள் அதிகமாக பூப்பதற்கு என்ன செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

செடிகளை அதிகம் பாதிக்கும் பூச்சிகளுக்கு இயற்கையான முறையில் மருந்து தயார்..!

பூக்கள் நிறைய பூப்பதற்கு டிப்ஸ்:

பூக்கள் அதிகமாக பூக்க என்ன செய்வது

வீட்டில் இருக்கும் இட்லி மாவை நன்றாக புளிக்க வைக்கவும். மூன்று நாட்கள் வரைக்கும் மாவை புளித்து வைக்கவும். புளித்து வைத்த மாவை ஒரு பக்கெட்டில் 6 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ளவும்.

இந்த தண்ணீரை செடிக்கு சூரியன் உதயத்திற்கு முன்னால் அதவாது காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் ஊற்ற வேண்டும். மாவு கலந்த தண்ணீரை வாரத்திற்கு இரண்டு முறை செடிக்கு ஊற்றவும். முக்கியமாக மாவு தண்ணீரை ஊற்றிய பின்பு சாதாரண தண்ணீர் ஊற்றலாம். ஆனால் சாதாரண தண்ணீர் ஊற்றி விட்டு மாவு தண்ணீர் ஊற்ற கூடாது.

புளித்த மாவில் நுண்ணுயிர் சத்து அதிகமாக இருப்பதால் செடிகளுக்கு தேவையான சத்து கிடைத்து 10 நாட்களில் செடிகளில் பூக்கள் பூத்து குலுங்கும். 

தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். மாவை தண்ணீர் ஊற்றினால் பூக்கள் நன்றாக பூக்கும் என்று நினைத்து கெட்டியான மாவை ஒற்றி விடாதீர்கள். புளித்த மாவை தண்ணீரில் கலந்து ஊற்றினால் தான் பயனாக இருக்கும்.

இது இல்லாமல் அரிசி கழுவிய தண்ணீர், வெங்காய தோல், முட்டை ஓடு போன்றவற்றை செடிகளில் போடலாம்.

பூக்காத ரோஜா செடியில் பூ பூப்பதற்கு அஞ்சறை பெட்டியில் உள்ள 2 பொருட்கள் போதும்..!

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம் 

 

Advertisement