கொய்யா மரத்தில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் செய்யுங்க..!

Advertisement

கொய்யா மரம் வளர்ப்பு | How to Increase Sweetness of Guava Fruit 

கொய்யா மரம் பலரது வீட்டில் வளர்க்கிறார்கள். ஏனென்றால், அதில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது. உடல் எடை குறைய, சர்க்கரை நோய் குணமாக உதவுகின்றது. சிலரது வீட்டில் ரொம்ப நாளாக கொய்யா மரம் இருக்கும். ஆனால் கொய்யா காய்கள் அதிகமாக இருக்காது. இன்னும் சிலரது வீட்டில் பூக்கள் அதிகமாக பூக்கும் ஆனால் காய்களே இருக்காது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு இந்த பதிவில் கூறியுள்ளது போல் செய்தால் காய்க்காத கொய்யா மரத்திலும் கொய்யாவை காய்க்க வைக்க முடியும். அது என்னென்ன குறிப்புகள் என்று படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு செடிகளை வளர விடாமல் தடுக்கும் பூச்சிகளை விரட்ட இந்த ஒரு கரைசல் போதும்..!

கொய்யா மரத்தில் அதிக காய்கள் காய்க்க:

கொய்யா மரம் வளர்ப்பு

கொய்யா  செடியை வைப்பதற்கு கரிசல் மண், செம்மண், களிமண் போன்ற மண்கள் உகந்ததாக இருக்கும்.

காய்கறி தோல், மண்புழு உரம், அரிசி கழுவிய தண்ணீர் போன்றவற்றை உரமாக போட வேண்டும்.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். ஈரப்பதம் அதிகமாக இல்லாமல் இருந்தால் தான் காய்கள் ஆரோக்கியமாக வளரும்.

வெங்காய தோலை ஊற வைத்த தண்ணீரை 10 நாட்களுக்கு ஒரு முறை ஊற்ற வேண்டும். அரிசி கழுவிய தண்ணீரை தினமும் பயன்படுத்தலாம். மாட்டு சாணத்தை காய வைத்து அதை கரைத்து 15 நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள உரங்களை மரத்தை சுற்றி குழியாக வெட்டி அதில் போட வேண்டும். அப்போது தான் மரத்திற்கு முழுமையாக உரங்கள் கிடைத்து செழிப்பாக வளரும்.

இதையும் படியுங்கள் ⇒ கொய்யா பழம் நன்மைகள்

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement