யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன்(UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு

upsc

UPSC வேலைவாய்ப்பு 2018:

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு ஒன்றை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) அறிவித்துள்ளது.

அறிவிப்பு படி 414 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திருமணமான பெண்கள் மற்றும் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்தது ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் CDS (II) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியான (03.09.2018) அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்ப படிவம் 08.08.2018 முதல் 03.09.2018 வரை செயல்படுத்தப்படும்.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் ஆணைக்குழு எழுத்து தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வையும், அதற்கடுத்த தேதி SSB நேர்முக தேர்வும் நடத்தப்படும்.

எழுத்து தேர்வு இந்தியா முழுவதும் நடைபெறும்.

ஆன்லைன் / ஆஃப்லைன் முறையில் உங்கள் பதிவு கட்டணம் செலுத்தலாம்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நல்ல உடல் நிலை இருக்க வேண்டும்.

காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் / அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு வருகை தந்தால், சிலபஸ், அட்மிட் கார்ட், முடிவுகள், எதிர்வரும் காலியிடங்கள் போன்ற பல விபரங்களை சேகரிக்க முடியும்.

யூ.பி .எஸ்.சி  காலியிடங்கள் விவரங்கள் 2018-19:

நிறுவனம் யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன்
வேலைவாய்ப்பின் வகை மத்திய அரசு
பணிகள் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (CDS) (II)
மொத்தக்காளியிடங்கள் 414
பணியிடங்கள் இந்தியா முழுவதும்

 

யூ.பி .எஸ்.சி  காலியிடங்களுக்கான தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி:

 • BE மற்றும் அனைத்து பட்டதாரிகளும் இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

 • ஐஎம்ஏ மற்றும் இந்திய கடற்படை அகாடமி (திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள்) 02.07.1995 முதல் 01.07.2000 வரை பிறந்தவர்.
 • விமானப்படை அகாடமி (திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள்) 02.07.1995 முதல் 01.07.1999 வரை பிறந்தவர்.
 • அலுவலர்களின் பயிற்சி அகாடமி (திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள்) 02.07.1994 முதல் 01.07.2000 வரை பிறந்தவர்.
 • அதிகாரிகளின் பயிற்சி அகாடமி (திருமணமாகாத பெண் விண்ணப்பதாரர்கள்) 02.07.1994 முதல் 01.07.2000 வரை பிறந்தவர்.
 • இறுதி  செமஸ்டர்  படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இறுதி ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வில் விண்ணப்பிக்கலாம்.
 • அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று தகுதியை சரிபார்க்கவும்.

தேர்வு முறை:

 • எழுத்து தேர்வு.
 • SSB தேர்வு.
 • நேர்முகத் தேர்வு.

விண்ணப்பமுறை:

 • ஆன்லைன் முறை.

விண்ணப்பக்கட்டணம்:

 • SC/ ST பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.200/-

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆஃப்லைன் முறை – ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.
 • ஆன்லைன் முறை – Net Banking/Visa/Master Credit/Debit Card.

UPSC காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை இவற்றில் காண்போம்:

upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

அவற்றில் UPSC ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.

விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த  காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பபடிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்படிவத்தை பதிவிறக்கவும்.

கடைசி தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யலாம்.

இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டுக்கு விண்ணப்ப படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

முக்கிய தேதி:

கடைசி தேதி: 03.09.2018 till 06.00 PM

 

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE