இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2022

TNHRCE Recruitment 2022

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2022 | TNHRCE Recruitment 2022

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி தாளம், வேதபாராயணம், உபகோயில் ஓதுவார், உதவி பரிசாரகர், உதவி யானைப் பாகன், கருணை இல்லம் காப்பாளர், கால்நடை பராமரிப்புத் தொழிலாளர், தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்), ஜெனரேட்டர் ஆப்ரேட்டர், பிளம்பர், சமையல்காரர், உதவி சமையல்காரர், துப்புரவு (சுத்தம் செய்பவர்) ஆகிய பணிகளை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வீரவேற்கப்படுகிறது. ஆகவே விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.08.2022 அன்று அல்லது அதற்கு முன் தங்கள் விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேல் கூறப்பட்டுள்ள பணிகளுக்கு மொத்தம் 18 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் இதர விவரங்களை நிறைவு செய்திருக்க வேண்டும். மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்:அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
பணிகள் தாளம், வேதபாராயணம், உபகோயில் ஓதுவார், உதவி பரிசாரகர், உதவி யானைப் பாகன், கருணை இல்லம் காப்பாளர், கால்நடை பராமரிப்புத் தொழிலாளர், தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்), ஜெனரேட்டர் ஆப்ரேட்டர், பிளம்பர், சமையல்காரர், உதவி சமையல்காரர், துப்புரவு (சுத்தம் செய்பவர்)
மொத்த காலியிடங்கள்18
பணியிடம்மதுரை  
விண்ணப்பிக்க கடைசி தேதி18.08.2022
அதிகாரப்பூர்வ இணையதளம்www.hrce.tn.gov.in

கல்வி தகுதி:

 • தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) பணிக்கு: ITI படித்து முன்னனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • மற்ற அனைத்து பணிகளுக்கு தமிழ் மொழி எழுத படிக்க தெரிந்திருந்த முன்னனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • மேலும் கல்வி தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்ட Notification -ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 35 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
 • நேர்காணலுக்கு வருபவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பமுறை:

 • அஞ்சல் (Offline) மூலம் 

அஞ்சல் முகவரி:

 • கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:

 1. www.hrce.tn.gov.in  என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்
 2. பின் அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை கிளிக் செய்யுங்கள்.
 3. பின் அறிவிப்பை கவனமாக தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Employment news in tamil