கிராம உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு | Nagapattinam Job Vacancy 2021

நாகபட்டினம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2021 | Nagapattinam District Recruitment 2021

நாகபட்டின மாவட்டம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கீழ்வேளூர் வட்டாட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிராமங்களில், நாகபட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுபடி 19 கிராம உதவியாளர் (Village Assistant) பனிகளை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு 5-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பாகும். எனவே விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பத்தாரர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் அஞ்சல் (offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை 09.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு  விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள nagapattinam.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

நாகபட்டினம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு விவரம்:

நிறுவனம் மாவட்ட வேலைவாய்ப்பு 
பணியிடம் நாகப்பட்டினம் 
பணிகள் கிராம உதவியாளர் (Village Assistant)
காலியிடங்கள் 19
வயது தகுதி  21 முதல் 35
அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி09.09.2021
அதிகாரபூர்வ வலைத்தளம் nagapattinam.nic.in

கல்வி தகுதி:

 • 5-ம் வகுப்பு முதல் தேர்ச்சி அடைந்த விண்ணப்பத்தாரர்கள் நாகபட்டினம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
 • மேலும் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழ் உள்ள Notification-ஐ Download செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.
 • மேலும் வயது தகுதி பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழ் உள்ள Notification-ஐ Download செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கபடலாம் இருப்பினும் தேர்ந்தெடுக்கும் முறையை பற்றி அறிந்துகொள்ள கீழ் உள்ள Notification-Download செய்து பார்க்கவும்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

 • வட்டாட்சியர் கீழ்வேளூர், கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.

குறிப்பு: கல்வித் தகுதிக்கான சான்றிதழ் (Xerox), சாதி சான்றிதழ் (Xerox), இருப்பிட சான்று (Xerox), வருமான சான்றிதழ் (Xerox), முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் (Xerox), புதுப்பிக்க பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு சான்றிதழ் (Xerox), ஆதார்கார்டு, குடும்ப அட்டை (Xerox) ஆகிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

கிராம உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பிற்கு எப்படி? விண்ணப்பிக்க வேண்டும்:

 1. nagapattinam.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது செய்தித்தாள் மூலம் வெளிடப்பட்டுள்ளது.
 3. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு விளம்பரத்தை சரிபார்த்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் கடைசி தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:-

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நாகை மாவட்டம் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு  (Nagapattinam job vacancy 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Employment News in tamil


 

Outdated Vacancy 

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு | Nagapattinam Job Vacancy 2021

Nagapattinam Job: நாகை மாவட்டம் நல்வாழ்வு சங்கம் (Nagapattinam District Health society) கோவிட் – 19 வைரஸ் நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட நலவாழ்வு சங்கம் கொரோனா நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தற்காலிகமாக மருத்துவர் (Doctor) / செவிலியர்கள் (Staff Nurse) / ஆய்வக நுட்புநர் (Lab Technician) / மருத்துவமனை பணியாளர் (Multi-Purpose Hospital Worker) / நுண் கதிர் வீச்சாளர் (Radiographer) / மருந்தாளுநர் (Pharmacist) பணிக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 67 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய கல்வி தகுதி அசல் சான்றிதழுடன் 28.05.2021 அன்று காலை 11:00 AM அளவில் நடைபெறும் நேர்காணலில் கலந்துக்கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதலின்படி தற்காலிகமாக 3 மாதங்களுக்கு மட்டும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம், திருப்பூண்டி மற்றும் கீழ்வேளூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்நாகை மாவட்டம் நல்வாழ்வு சங்கம் (Nagapattinam District Health society)
விளம்பர எண்ந.க.எண்:1868/அ3/2021
பணிகள்மருத்துவர் (Doctor) / செவிலியர்கள் (Staff Nurse) / ஆய்வக நுட்புநர் (Lab Technician) / மருத்துவமனை பணியாளர் (Multi-Purpose Hospital Worker) / நுண் கதிர் வீச்சாளர் (Radiographer) / மருந்தாளுநர் (Pharmacist)
மொத்த காலியிடம்67
பணியிடம்நாகப்பட்டினம் 
நேர்காணல் தேதி28.05.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.nagapattinam.nic.in

பணிகள், மொத்த காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரம்:

பணிகள் காலியிடம் மாத சம்பளம் 
மருத்துவர் (Doctor)18ரூ. 60,000/-
செவிலியர்கள் (Staff Nurse)18ரூ. 14,000/-
ஆய்வக நுட்புநர் (Lab Technician)05ரூ. 10,000/-
மருத்துவமனை பணியாளர் (Multi-Purpose Hospital Worker)22ரூ. 6500/-
நுண் கதிர் வீச்சாளர் (Radiographer)03ரூ. 10,000/-
மருந்தாளுநர் (Pharmacist)01
மொத்த காலியிடம்             67

 

கல்வி தகுதி:

 • மருத்துவர் (Doctor) பணிக்கு MBBS படிப்பினை முடித்து முதுநிலை படிப்பிற்காக காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • செவிலியர்கள் (Staff Nurse) பணிக்கு DGNM அல்லது B.Sc Nursing படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • ஆய்வக நுட்புநர் (Lab Technician) பணிக்கு Diploma in medical lab Technician படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • நுண் கதிர் வீச்சாளர் (Radiographer) பணிக்கு Diploma in Radio Diagnosis in Technology படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • மருந்தாளுநர் (Pharmacist) பணிக்கு Diploma in Pharmacy படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணல் (Walk in interview)

நேர்காணல் நடைபெறும் விவரம்:

தேதி நேரம் இடம் 
28.05.2021 11.00 AM ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகத்தில் தரை தளத்தில் உள்ள கூட்ட அரங்கம் (மாவட்ட விளையாட்டு அரங்கம் செல்லும் வழி) மாவட்ட ஆட்சியரகம், நாகப்பட்டினம் (தொலைப்பேசி எண் 04365 253036

நாகப்பட்டினம் வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

 1. nagapattinam.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது செய்தி தாள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
 3. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு விளம்பரத்தை சரிபார்த்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:-

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நாகை மாவட்டம் நல்வாழ்வு சங்கம் (Nagapattinam job vacancy 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Employment News in tamil