மாவட்ட வேலைவாய்ப்பு 2021 | Thanjavur Jobs 2021

thanjavur district recruitment

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2021 | Thanjavur District Recruitment  2021

Thanjavur Jobs 2021: தஞ்சாவூர் மாவட்டம் சுகாதார சங்கம் / தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் 11 மாதங்கள் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்றிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர், ஆய்வக நுட்புநர் மற்றும் காசநோய் சுகாதார பார்வையாளர் ஆகிய பணிகளுக்காக மொத்தம் 04 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 13.09.2021 அன்றைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம் சுகாதார சங்கம் / தேசிய காசநோய் ஒழிப்பு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள thanjavur.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2021

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் சுகாதார சங்கம்/ தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் 
பணிகள் முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர், ஆய்வக நுட்புநர் மற்றும் காசநோய் சுகாதார பார்வையாளர்
பணியிடம் தஞ்சாவூர் 
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 
காலியிடம் 04
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 03.09.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2021
அதிகாரப்பூர்வ இணையதளம் thanjavur.nic.in

பணிகள், காலியிடம் மற்றும் சம்பள விவரம்:

பணிகள் காலியிடம் சம்பளம் 
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்01Rs.15,000/-
ஆய்வக நுட்புநர்02Rs.10,000/-
காசநோய் சுகாதார பார்வையாளர்01Rs.10,000/-

கல்வி தகுதி:

 • முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Degree or Diploma Medical Laboratory Technology படித்தவர்கள், Certificate Course In Computer Operation முடித்தவர்கள் (குறைந்தபட்சம் 2 மாதம்) படித்தவர்கள் மற்றும் Permanent Two Wheeler Driving License உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • ஆய்வக நுட்புநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Intermediate (10+2), Diploma or Certified Course In Medical Laboratory Technology or Equivalent படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • காசநோய் சுகாதார பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Graduate in Science, Intermediate (10+2), Certificate Course In Computer Operation (Minimum Two Months), TB Health Visitor படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் வயது 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி: 

 • விண்ணப்பத்துடன் ரூ.25/- Stamp ஒட்டி தங்களது முகவரியை உள்ளிட்டு, துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (காசநோய்) மாவட்ட காசநோய் மையம், இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகம், தஞ்சாவூர் 613001 என்ற முகவரிக்கு தங்களது கல்வி, தகுதி சான்றிதழ், கணினி சான்று, Driving License, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று ஆகிய சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கபட்டிருக்க வேண்டும்.

குறிப்பு: தபால் உரையின் மேல் பதவியின் பெயர் கட்டாயம் குறிப்பிட வேண்டும். 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

தஞ்சாவூர் மாவட்டம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

குறிப்பு: இது ஒரு செய்தித்தாள் அறிவிப்பாகும். ஆகவே தஞ்சாவூர் மாவட்டம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் thanjavur.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு சென்று அறிவிப்பை சரிபார்த்த பின் விண்ணப்பிக்கவும்.

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தஞ்சாவூர் மாவட்ட  வேலைவாய்ப்பு 2021 (Thanjavur District Jobs 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2021

Thanjavur Jobs 2021

Thanjavur Jobs 2021: தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புதுறையின் கீழ் இயங்கும் அரசினர் கூர்நோக்கு இல்லங்களில் தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் (Counsellor) சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.09.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்ட சமூக பாதுகாப்புதுறை வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள https://thanjavur.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2021:

நிறுவனம்சமூக பாதுகாப்புதுறை
பணிCounsellor
சம்பளம்ஒரு அமர்விற்கு ரூ.1000/- வீதம் ஆண்டுக்கு 60 அமர்வுகள் (ஒரு நபருக்கு)
பணியிடம்தஞ்சாவூர்
மொத்த காலியிடங்கள்03
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி02.09.2021
விண்ணப்பிக்க கடைசி நாள்24.09.2021
அதிகாரப்பூர்வ இணையத்தளம்thanjavur.nic.in

கல்வி தகுதி:

 • உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

கண்காணிப்பாளர், அரசினர் குழந்தைகள் இல்லம், தெற்கு காவல்நிலையம் எதிரில் தஞ்சாவூர் – 7.

தஞ்சாவூர் மாவட்டம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. thanjavur.nic.in  என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யுங்கள் பின்  ‘Govt Observation Home, Thanjavur-Counsellor Post (Consolidated Pay) Application invited’ என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யுங்கள்.
 5. பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 24.09.2021 என்ற தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தஞ்சாவூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்பு 2021 (Thanjavur District Jobs 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!