இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021

TNHRCE Recruitment 2021

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 – TNHRCE Velaivaippu 2021

TNHRCE Recruitment 2021:- இந்து சமய அறநிலையத்துறை தற்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி பூசாரி, காவலர், 2-ம் நிலை சாமியார், மின் பணியாளர், அலுவலக பணியாளர், திருவலகு, மேல குழு, ஓதுவார், இரவு காவலர், பரிச்சாரகர், ஓட்டுநர் மற்றும் இது போன்ற பல காலிப்பணிகளை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமேஸ்வரம், கோவை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, வேலூர், கடலூர், திருப்பூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் தகுதி பெற்ற நபர்கள் 05.08.2021, 06.08.2021, 07.08.2021, 08.08.2021, 09.08.2021 & 11.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மேல் கூறப்பட்டுள்ள மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்புப்பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

TNHRCE வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்இந்து சமய அறநிலையத்துறை
பணிகள்பூசாரி, காவலர், 2-ம் நிலை சாமியார், மின் பணியாளர், அலுவலக பணியாளர், திருவலகு, மேல குழு, ஓதுவார், இரவு காவலர், பரிச்சாரகர், ஓட்டுநர் மற்றும் பல பணிகள்
மொத்த காலியிடங்கள் 230+
விண்ணப்பிக்க கடைசி நாள் 05.08.2021, 06.08.2021, 07.08.2021, 08.08.2021, 09.08.2021 & 11.08.2021
பணியிடம் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமேஸ்வரம், கோவை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, வேலூர், கடலூர், திருப்பூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை
சம்பளம்Rs.10,000/- முதல் Rs.58,600/- வரை. சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்tnhrce.gov.in

கல்வி தகுதி:

 • தமிழ் மொழி எழுதப்படிக்க தெரிந்தவர்கள், அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து 8th, SSLC, ITI தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
 • அஞ்சல் முகவரி பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

 1. tnhrce.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதிகளை சரி பார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை சம்மந்தப்பட்ட திருக்கோவில் அலுவலத்தில் ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.
 5. பின் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கூறப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கடைசி தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Employment News in tamil