ஓமவள்ளி இலையை இப்படியும் பயன்படுத்தலாமா..? இத்தனை நாட்கள் இது தெரியமா போச்சே..!

Omavalli Face Pack in Tamil 

Omavalli Face Pack in Tamil 

பொதுவாக நாம் ஓமவள்ளி இலையை சளி பிரச்சனைகளுக்கு மருந்தாக தான் பயன்படுத்தி இருக்கின்றோம். ஆனால் இந்த ஓமவள்ளி இலை உங்களின் முகம் பொலிவு பெறுவதற்கும் உதவிபுரியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா..! ஆம் நண்பர்களே ஓமவள்ளி இலையை பயன்படுத்தி உங்களின் முகத்தை நன்கு பொலிவு பெற செய்யமுடியும்.

அது எப்படி என்பதை பற்றியும் அதன் வழிமுறை பற்றியும் இன்றைய பதிவில் காண  இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

இதையும் படியுங்கள்=> ஓமவள்ளி இலை 1 போதும் உங்கள் நரை முடியை கருமையாக்கும் .!

Instant Glow Face Pack Homemade in Tamil:

Skin Whitening Cream Homemade Tamil டிப்ஸ் – 1

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ஓமவள்ளி இலை – 10
  2. கடலை மாவு – 2 டீஸ்பூன் 
  3. மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்   

முதலில் ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்துவைத்துள்ள 10 ஓமவள்ளி இலைகளை போட்டு நன்கு அரைத்து அதன் சாற்றினை மட்டும் வடிக்கட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் 2 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 10 – 15 நிமிடங்களுக்கு வைத்து பின்னர் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறும்.

டிப்ஸ் – 2

Instant glow face pack homemade in tamil

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ஓமவள்ளி இலை – 10
  2. கடலை மாவு – 2 டீஸ்பூன் 
  3. தயிர் – 8 டீஸ்பூன்
  4. எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் நன்கு அரைத்து முகத்தில் தடவி 5 – 10 நிமிடங்களுக்கு வைத்து பின்னர் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

இதனை வாரத்திற்கு இருமுறை அல்லது தினமும் தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

டிப்ஸ் – 3 

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ஓமவள்ளி இலை – 5
  2. கடலை மாவு – 2 டீஸ்பூன்
  3. அரிசி மாவு – 2 டீஸ்பூன்
  4. ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன்

மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் நன்கு அரைத்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு வைத்து பின்னர் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.

இதனை வாரத்திற்கு இருமுறை அல்லது தினமும் தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil