Sabja Face Pack Benefits In Tamil
பெண்கள் அனைவருக்கும் தங்களுடைய முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்கு நிறைய க்ரீம்கள் மற்றும் காஸ்மெடிக்ஸ் ஐட்டம்ஸ் பயன்படுத்துவார்கள். இது முற்றிலும் அவர்களின் இயற்க்கை அழகை கெடுக்கிறது. முடிந்தவரை பெண்கள் இயற்கையான முறையில் தங்களை அழகு படுத்தி கொள்வதே நன்று. உங்கள் வீட்டினிலே உங்களை அழகுபடுத்துவதற்கான பொருட்கள் ஏராளம் கொட்டி கிடக்கிறது. நீங்கள் சீக்கிரத்தில் வெள்ளையாக வேண்டும் எதுவும் எளிதில் கிடைக்க வேண்டும் என நினைத்து நீங்கள் முகத்திற்கு செயற்கையான கெமிக்கல் க்ரீம்களை உபயோகிக்கிறீர்கள்.
அதுவும் பலன் தரலாம் ஆனால் நிரந்தரமாக பலன் தராது. அந்த க்ரீமை ஒரு நாள் நிறுத்திவிட்டால் அதன் சைடு எபக்ட் உங்களுக்கு காட்ட ஆரம்பிச்சிடும். அதனால் சூப்பரான இயற்கை முறையில் உங்கள் முகத்தை அழகாக்க ஒரு டிப்ஸ் உங்களுக்காக. சப்ஜா விதை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீங்க ஜூஸ் எல்லாம் குளிர்ச்சிக்காக சேர்ப்பாங்க. அதை வைத்து முகத்தை அழகாக்கலாம் அது எப்படின்னு தெரிஞ்சிப்போம் வாங்க.
Sabja Face Pack செய்ய தேவையான பொருட்கள் :
- சப்ஜா விதைகள் – 1 டீஸ்பூன்
- சந்தனத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- 1 எலுமிச்சை பழச்சாறு – 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்
செய்முறை :
- சப்ஜா விதைகளை கையாலே மத்தை வைத்து நசுக்கிக் கொள்ளுங்கள் அது பொற பொறவென்று தான் இருக்கும். அப்படியில்லையென்றால் சப்ஜா விதைகளை மிக்சியில் அரைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.
- அரைத்த சப்ஜா பொடியில் சந்தனத்தை கலந்து கொள்ளுங்கள். இப்போது ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இப்போது 10 நிமிடங்களுக்கு ப்ரிஜ்ஜில் வைத்து விடுங்கள்.
- முகத்தை பாலால் கழுவி விட்டு ப்ரிஜ்ஜில் வைத்த சப்ஜா பேஸ் பேக்கை போடுங்கள். அப்படியில்லையென்றால் முகத்தை தண்ணீரால் சுத்தமாக கழுவி விட்டு பேக்கை போட்டு கொள்ளுங்கள்.
- 20 நிமிடங்களுக்கு பேஸ் பேக்கை முகத்தில் அப்படியே உலர விட்டு பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.
Sabja Face Pack Benefits In Tamil For Skin :
- சப்ஜா விதைகளை மேற்கூறிய பேஸ் பேக்காக போடும் போது உங்கள் முகம் பளபளப்பாக இருக்க செய்கிறது.
- சப்ஜா விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை இயற்கையாகவே மேம்படுத்துகிறது.
- சப்ஜா விதைகள் முகத்தில் காணப்படும் பருக்களை தடுக்கிறது. இதனால் உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.
சப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |