நீங்கள் பேஷியல் செய்பவராக இருந்தால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்

what not to do after facial in tamil

பேஷியல் என்பது

இன்றைய காலத்தில் அனைவருமே பேஷியல் செய்கிறார்கள். அதிலும் சில நபர்கள் விஷேச நாட்கள் மட்டும் பேஷியல் செய்வார்கள். இன்னும் சில நபர்கள் பேஷியல் செய்வதை பழக்கமாக வைத்திருப்பார்கள். பேஷியல் செய்வதால் சருமத்தை பாதுகாக்கிறது. ஆனால் சருமத்தை பாதுகாப்பதாற்காக செய்த பேஷியலில் உங்களை அறியாமல் சில தவறுகளை செய்து விடுகிறீர்கள். அது என்னென்ன தவறுகள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஷியல் செய்த பின் செய்ய கூடாத தவறுகள்:

பேஷியல் செய்த பின் கைகளை எப்பொழுதும் முகத்தில் தொட கூடாது. ஏனென்றால் உங்களின் கைகளில் உள்ள பாக்ட்ரியாக்கள் முகத்தில் சேரும். முகத்தில் கிருமிகள் சேரும் போது சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.  அதனால் இந்த தவறினை செய்யாதீர்கள். 

இதையும் படியுங்கள் ⇒ காசு கொடுத்து பேஷியல் செய்வதை விட இந்த பேஷியல் செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.!

அடுத்து பேஷியல் செய்த உடனே மேக்கப் போட கூடாது. கொஞ்சம் நேரமாவது பேஷியல் மட்டும் இருக்க வேண்டும். நீங்கள் பேஷியல் செய்தவுடன் மேக்கப் போட்டால் சருமத்தில் பருக்கள், கரும் புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும். 

பேஷியல் செய்த பிறகு மன கவலையுடன் இருக்க கூடாது. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உடலை புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ளுங்கள்.

முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் தூசிகளை நீக்க கிளென்சிங் பயன்படுத்த கூடாது. நீங்கள் பேஷியல் செய்த பிறகு கிளென்சிங் பயன்படுத்தினால் சருமத்தில் மிக பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். 

நீங்கள் எந்த மாதிரியான பேஷியல் செய்கிறீர்களோ அதற்கு ஏற்றவாறு உங்களின் முகத்தை அழகாக்க கூடிய பொருட்களும் இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களின் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும். 

பேஷியல் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

 பேஷியல் செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் சருமத்தில் நிறத்தை அதிகரிக்க செய்யவும், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கவும், பேஷியல் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கவும் பேஷியல் உதவுகிறது.  

இதையும் படியுங்கள் ⇒ Beauty parlour சென்று Facial போட முடியலன்னு கவலைப்படாதீங்க..! ஏனென்றால் வீட்டிலேயே Facial போடலாம் வாங்க.!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil