ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் தெரியுமா..?

Rishaba Rasi Palan 2023 

ரிஷப ராசி 2023 எப்படி இருக்கும் | Rishaba Rasi Palan 2023 

ராசியில் இரண்டாவதாக இருப்பது ரிஷப ராசி தான். இந்த ராசியில் ரோகிணி, மிருகசீரிஸம், கிருத்திகை போன்ற நட்சத்திரங்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வாழ்க்கை அமையும். ஜோதிட கணக்கின் படி ராசியை வைத்து அவர்களின் வாழ்க்கை பலனை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு 2023 எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி 2023:

rishaba rasi palangal

இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்பட்டு வெற்றியை அடைவீர்கள். ஆரம்பத்தில் மன அழுத்த நிலையில் இருப்பீர்கள். பணியிடம் உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்காது.

இருந்தாலும் உங்களின் கடின உழைப்பிற்கான பலனை காண்பீர்கள். தொழிலில் வளர்ச்சி காணப்படும். பணியில் உயர் பதவிகள் கிடைக்கும். மேலும் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ மகர ராசியில் பிறந்தவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் தெரியுமா..?

கல்வி:

ரிஷப ராசி 2023

ஸ்ரீ குரு பகவான் அருள் கிடைப்பதால் படிப்பில் ஆர்வம் அதிகரித்து நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நவம்பர் மாதத்தில் வெற்றி கிடைக்கும். உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பிடித்த துறையில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

குடும்ப வாழ்க்கை:

ரிஷப ராசி 2023

ரிஷப ராசிக்காரர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வீட்டில் பதற்ற நிலை ஏற்படும். வீட்டில் உள்ளவர்களுக்கு  உடல் நல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் கவலையாக இருப்பீர்கள். இருந்தாலும் கவலை வேண்டாம் செப்டம்பர் மாதத்தின் ஆரம்பத்திலுருந்து வீட்டில் உள்ள பிரச்சனைகள் சரியாகிவிடும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறும். 

ரிஷப ராசி திருமண வாழ்க்கை 2023:

ரிஷப ராசி 2023

ஆண்டின் தொடக்கத்தில் ராகு 12-வது இடத்தில் இருப்பதால் உறவுகளில் பிரச்சனை ஏற்படும். அதனால் விட்டு கொடுத்து சென்றால் மட்டுமே நல்லுறவு நீடிக்கும். ஏப்ரல் மாதம் ஆரம்பத்திலுருந்து பிரச்சனை சரியாகி உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் துணையின் ஆரோக்கியம் மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

ரிஷப ராசி தொழில் 2023:

இந்த ஆண்டு தொழிலில் உங்களின் தகுதியை வளர்த்து கொள்வீர்கள். மேலும் தொழிலில் வளர்ச்சி காணப்படும். வெற்றியை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பணியில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். தொழிலில் இட மாற்றங்கள் ஏற்படலாம்.

ஆரோக்கியம்:

ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் ஏப்ரல் மாத்திற்கு பிறகு ராகு பகவான் 12 ஆம் இடத்திற்கு வருவதால் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் அதிகமாக கவனம் செழித்த வேண்டும்.

மேலும், ஜூன் மாதத்தில் சனி வக்ர நிலையில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த பிரச்சனைகள் ஏற்படும். அப்போது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி தேவைப்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். இந்த நேரத்தில் அலட்சியம் செய்யாதீர்கள் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்துங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ இந்த ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்