வயிற்றில் இருக்கும் குழந்தை எடை அதிகரிக்க – How to Make Baby Gain Weight in Womb in Tamil
ஒரு பெண் கருத்தரிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும். குறிப்பாக அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் தாண்டி அந்த குழந்தையை சுமக்கும் பெண்ணிற்கு அதிக அக்கறை, அதிக சந்தோசம், அதிக ஆர்வம் இருக்கும். தன் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆனா, பெண்ணா, சிவப்பா, கருப்பா, பிறகு குழந்தை தாயின் முக ஜாடையில் இருக்குமா அல்லது தந்தையின் முக ஜாடையில் இருக்குமா, எப்பொழுது குழந்தையை பெற்றெடுப்போம் என்று நிறைய கேள்விகளும், சிந்தனைகளும் அந்த பெண்ணின் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அதிலும் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் ஸ்கேன் ரிப்போர்ட்டில் தன் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை அறிந்துகொள்வதில் மிகவும் ஆர்வமாக மற்றும் பதற்றமாகவும் இருப்பார்கள். ஒருவேளை அந்த குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் போது அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதில் தான் அதிக எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும். அந்த வகையில் வயிற்றில் இருக்கும் இருக்கும் குழந்தையின் எடை குறைவாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறினால் அதனை எப்படி சரி செய்வது என்று கவலையுடன் இருக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் வயிற்றில் இருக்கும் குழந்தை எடை அதிகரிக்க உதவும் 9உணவுகளை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்னென்ன உணவுகள் என்று இப்பொழுது பார்க்கலாம்.
பன்னீர்:
How to Make Baby Gain Weight in Womb in Tamil – முதலாவதாக நாம் தெரிந்துகொள்ள இருப்பது பன்னீர் தான். பொதுவாக கர்ப்ப காலத்தில் பன்னீர் சாப்பிடலாமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். நிச்சயமாக பன்னீர் சாப்பிடலாம் அதுவும் உங்களுக்கு பிடித்த மாதிரி பன்னீரை சமைத்து சாப்பிடலாம். பன்னீரில் புரோட்டீன், கால்சியம், வைட்டமின், துத்தநாகம், மெக்னீசியம் என்று பன்னீரில் நிறைய சத்துக்கள் இருக்கிறது. ஆக இது உங்கள் குழந்தையின் வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் உங்கள் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க முடியும். இருப்பினும் அளவுடன் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பானங்கள்..!
பருப்பு வகைகள்:
கர்ப்பிணி பெண்கள் சில வகையான பருப்பு வகைகளை தேர்வு செய்து தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கலாம். ஆக பருப்பு வகையில் பச்சை பட்டாணி, பீன்ஸ், ராஜ்மா, பச்சை பயிர், கொண்டை கடலை, வேர்க்கடலை இது போன்ற பருப்பு வகையில் புரோட்டீன், கால்சியம், நார்ச்சத்து, இரும்பு சத்து என்று நிறைய இருக்கிறது. ஆக இந்த பருப்பு வகையில் ஏதாவது ஒன்றை தினமும் மாலை நேரத்தில் சமைத்து சாப்பிடுவருவதன் மூலம் குழந்தையின் எடையை அதிகரிக்கலாம்.
கேழ்வரகு:
How to Make Baby Gain Weight in Womb in Tamil – குழந்தை வளர்ச்சிக்கு அதிக உதவக்கூடிய சத்துக்கள் என்று பார்த்தால் இரும்பு சத்து, கால்சியம் சத்து இவை இரண்டு மட்டும் தான். இந்த இரண்டிற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்குவது கேழ்வரகு தான். ஆக கேழ்வரகில் ஏதாவது ஒன்றை சமைத்து சாப்பிடுவருவது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆக இந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு முறையில் சமைத்து சாப்பிட்டு வாருங்கள். இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தையும் சரி செய்யும்.
கோதுமை:
கோதுமை அல்லது கோதுமை குருணையில் ஏதாவது ஒரு உணவை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து சாப்பிட்டு வர வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும், நல்ல எடையுடனும் வளர்ச்சியடை செய்ய கோதுமை உதவுகிறது. ஆக உங்களுடைய உணவு முறையில் கோதுமையில் செய்யப்பட்ட உணவுகளை சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது.
ட்ரை ஃப்ரூட்ஸ்:
கர்ப்ப காலத்தில் அதிகளவு ட்ரை ஃப்ரூட்ஸ் எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்து அதிலும் அக்ரூட், பாதாம், சியா விதைகள், பூசணி விதைகள், தர்பூசணி விதைகள், பேரிச்சை, காய்ந்த திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இது குழந்தையின் எடையை அதிகரிக்க உதவி செய்கிறது.
கீரை காய்கறிகள்:
How to Make Baby Gain Weight in Womb in Tamil – கீரைகளில் பச்சை நிறத்தில் உள்ள அனைத்து கீரை வகைகளையும் நீங்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது. குறிப்பாக பசலைக்கீரை, பாலைக்கீரை, முருங்கை கீரை, வெந்தய கீரை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் எல்லாம் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இந்த இருப்பு சத்து உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. இதனால் குழந்தைக்கு தேவையான அளவு இரத்த ஓட்டம் செல்ல உதவி செய்கிறது. மேலும் கீரை மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
முட்டை:
தினமும் ஒன்று முதல் மூன்று முட்டையை அவித்து அவற்றில் இருக்கும் வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஏன் என்றால் இது குழந்தைக்கு மிகவும் சிறந்த ஒன்றாகும். வயிற்றில் இருக்கும் குழந்தையின் அறிவு திறன் அதிகரிக்கும். குறிப்பாக மூளையின் இருக்கும் செல்கள் அனைத்தும் நன்கு டெவலப் ஆகும். ஆக முட்டையை அவித்து மட்டும் சாப்பிடுங்கள் மற்றபடி ஆம்லெட் செய்தோ, பொரியல் செய்தோ சாப்பிட வேண்டாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குழந்தைகளுக்கு தொடர்ந்து சளி, இருமல் இருக்குதா..! அப்போ பனங்கற்கண்டை இப்படி செய்து கொடுங்க..!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |