Sapota Ice Cream Recipe
இந்த வெயிலுக்கு வீட்டிலும் உட்கார முடியாமல், வெளியிலும் உட்கார முடியாமல் என்னடா செய்வது என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். ஒன்று வீட்டில் ஏசி வாங்கலாமா ஏர் கூலர் வாங்கலாமா என்று யோசிப்பார்கள். இரண்டாவதாக என்ன சாப்பிடலாம் என்று யோசிப்பார்கள். அதில் ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம் கட்டாயம் இருக்கும்.
இந்த ஐஸ்கிரீமை நீங்கள் கடையில் வாங்கி சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமற்றது. அதனால் நீங்கள் வீட்டில் உள்ள பழங்களை வைத்து ஐஸ்கிரீம் செய்வது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். அதனால் இந்த பதிவில் சப்போட்டா ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
Ingredients
- சப்போட்டா பழம்-4
- பால்-1/2 லிட்டர்
- சீனி- 1/2 கிலோ
- பிரஸ் மில்க்-1/4 லிட்டர்
Instructions
சப்போட்டா ஐஸ்கிரீம் செய்முறை:
முதலில் சப்போட்டா பழம் மூன்று தோலை நீக்கிவிட்டு எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில பால் ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும், அதில் சிறிதளவு சீனி சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். அதனுடன் மில்க் பவுடர் 3 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.
அடுத்து பிரஸ் கிரீம் 1/4 கப் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் இதில் தோல் நீக்கி வைத்துள்ள சப்போட்டா பழத்தை அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இதனையும் அதில் மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
பின் இதனுடனே காய்ச்சு வைத்த பாலையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இதனை ஒரு டப்பாவில் சேர்த்து பிரிட்ஜில் 8 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பிறகு எடுத்து பார்த்தால் ஐஸ்கிரீமாக வந்திருக்கும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |