Apple Tamil Word
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் கூறப்போகின்றோம். பொதுவாக பழங்கள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். நாம் அனைவருமே பழங்கள் சாப்பிட்டு இருப்போம். அதில் குழந்தைகளுக்கும் தெரிய கூடிய பழம் என்றால் அது ஆப்பிள் தான். காரணம் ஸ்கூல் படிக்கும் காலத்தில் முதன் முதலில் சொல்லிக்கொடுப்பது A For Apple தான். அதனால் தான் குழந்தைகளுக்கு ஆப்பிள் என்ற வார்த்தை தெரிகிறது.
ஆனால் பெரியவர்களுக்கு ஆப்பிள் என்ற வார்த்தைக்கான தமிழ் வார்த்தை என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் நம் பதிவின் வாயிலாக ஆப்பிள் என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் பெயர் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ஒரு ஆப்பிள்ல இருக்குற கலோரீஸ் அளவு எவ்வளவு தெரியுமா
ஆப்பிள் வரலாறு:
பொதுவாக நாம் அனைவருமே ஆப்பிளை சாப்பிட்டு இருப்போம். அப்படி மிகவும் பிரபலமான மற்றும் அதிக ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிளானது மத்திய ஆசியாவில் தான் முதன் முதலில் பயிர் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஆப்பிளானது Malus domestica என்ற சிற்றினத்தைச் சேர்ந்தது. மேலும் இதன் முன்னோடி இனமான Malus Sieversii என்பது இன்றும் மத்திய ஆசியாவில் கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
இந்த ஆப்பிள்களில் சுமார் 7500 இரகங்கள் உள்ளன என்று ஆராய்ச்சியில் கூறுகின்றன. இந்த ஆப்பிள் மரமானது இலையுதிர் மரமாக இருக்கிறது. இது சுமார் 5-12 மீ உயரம் வரை வளரக்கூடியது. இது பரந்த கிளைப்பகுதிகளையும் கொண்டுள்ளது.
ஆப்பிள்-ல எதுக்கு இந்த ஸ்டிக்கர் ஓட்டுறாங்க தெரியுமா..
இதன் நீள்கோள வடிவ இலைகள் காம்பில் மாற்றடுக்காக அமைந்துள்ளன. இதன் வெள்ளை நிறப்பூக்கள் ஐந்து இதழ்களை கொண்டுள்ளது. இந்த ஆப்பிள் பழமானது இலையுதிர் காலத்தின் போது முதிர்ச்சி அடைகின்றது.
ஆப்பிள் தமிழ் பெயர்:
இந்த ஆப்பிள் என்ற ஆங்கில வார்த்தைக்கு குமளிப்பழம், ஆப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம் என்று தமிழ் பெயர்கள் இருக்கின்றன.
மேலும் சில இடங்களில் இதை அரத்தி அல்லது குமுளி என்றும் அழைப்பார்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |