Pearl Millet in Tamil
நாம் சாப்பிடும் உணவுகளின் பெயர்களை அறிந்திருப்போம், மேலும் அவை எப்படி சமைக்கிறீர்கள் என்று அறிந்திருப்போம். செய்யும் உணவுகள் ருசியாக இருக்கிறதா, அப்படி ருசியாக இல்லை என்றால் என்னா பண்ண நல்லாவே இல்லை என்று தான் கூறியிருப்போம். அதற்க்கு மாறாக நீங்கள் சாப்பிடும் உணவு பொருட்கள் எங்கிருந்து தயாரிக்கப்பட்டது, அதற்கு வேறு பெயர்கள் ஏதும் இருக்கின்றதா என்றெல்லாம் நமக்கு தெரிந்திருக்காது. எந்த பொருளாக இருந்தாலும் சரி, உணவாக இருந்தாலும் சரி அதனை பற்றிய முழு விவரங்களை அறிந்திருக்க வேண்டும். அதனால் தான் இந்த பதிவில் முத்து திணை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம்.
Pearl Millet in Tamil Name:
Pearl Millet என்பதன் தமிழ் பெயர் முத்து தினை என்பதாகும்.
முத்து தினை பற்றிய தகவல்:
முத்து தினை ( Cenchrus americanus , பொதுவாக பென்னிசெட்டம் கிளௌகம் என்று அழைக்கப்படுகிறது ) மிகவும் பரவலாக வளர்க்கப்படும் தினை வகையாகும் . இது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து ஆப்பிரிக்காவிலும் இந்திய துணைக்கண்டத்திலும் வளர்க்கப்படுகிறது . பன்முகத்தன்மையின் மையம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வளர்ப்புப் பகுதி மேற்கு ஆப்பிரிக்காவின் சஹேல் மண்டலத்தில் உள்ளது.
தாவரம் எப்படி இருக்கும்:
முத்து தினையில் 3-4 மில்லி மீட்டர் ( 1 ⁄ 8 – 5 ⁄ 32 அங்குலம்) நீளமுள்ள முட்டை வடிவ தானியங்கள் உள்ளன. இவை கிட்டத்தட்ட வெள்ளை, வெளிர் மஞ்சள், பழுப்பு, சாம்பல், ஸ்லேட் நீலம் அல்லது ஊதா நிறமாக இருக்கலாம். 1000-விதை எடை கொண்ட முத்து தினை 2.5 முதல் 14 கிராம் வரை இருக்கலாம்.
தாவரத்தின் உயரம் 0.5–4 மீட்டர் வரை இருக்கும்.
சாகுபடி எப்படி.?
குறைந்த ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலை உள்ள இடத்தில் முத்து தினை வளர்வதற்கு உகந்ததாக இருக்கிறது. மேலும் அதிக உப்புத்தன்மை குறைந்த PH அளவு இடத்தில் நன்றாக வளர கூடியது.
என்னென்ன சமைக்கலாம்:
முத்து தினை (கம்பு) என்பது ரொட்டி, தோசை, கஞ்சி, அப்பம், தின்பண்டங்கள் போன்றவற்றின் வடிவங்களில் பரவலாக நுகரப்படும் ஒரு வகை தானியமாகும். இது சில புளித்த பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது:
இவற்றில் கம்பு, கூழ், கஞ்சி போன்ற உணவுகள் செய்ய உதவுகிறது.
Pearl Millet Side Effects:
செரிமான பிரச்சனைகள்:
சிலருக்கு தினை சாப்பிடும் பழக்கம் இல்லாதபோது, இதனை எடுத்துக்கொள்ளும் போது செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதாவது வாயு அல்லது வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
ஒவ்வாமைகள்:
முத்து தினை சாப்பிடும் சில நபர்களுக்கு அழற்சிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது, அரிப்பு, படை நோய் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.
தைராய்டு பிரச்சனைகள்:
தைராய்டு சுரப்பி செயலிழப்பு உள்ளவர்கள் முத்து தினை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது, அவர்களுக்கு மேலும் பாதிப்பினை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் இது, வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
சிறுநீரக கற்கள்:
முத்து திணையில் உள்ள ஆக்சலேட்டுகள், சரியாக சமைக்கப்படாவிட்டால், சிறுநீரக கற்கள் உருவாகலாம். எனவே, சிறுநீரக பிரச்சனைகள் இருப்பவர்கள் முத்து தினையை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது.
Pearl Millet Calories:
- 100 கிராம் Pearl Millet -ல் 361 Kcal உள்ளது.
ஆரோக்கிய நன்மைகள்:
- ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கிறது.
- செரிமானத்திற்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது, மேலும் மலசிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
- முத்து திணையில் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டுள்ளதால் சர்க்கரை அளவை குறைய செய்கிறது.
- நார்ச்சத்து குறைவாக இருப்பதால் இதய பிரச்சனை ஏதும் வராமல் தடுக்கிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |