சிரிக்க வைக்கும் விடுகதைகள்..! | New Vidukathai in Tamil

Vidukathai in Tamil New

Vidukathai in Tamil

பொதுவாக நம் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து விளையாடினோம் என்றால் இது மாதிரி விடுகதைகள் தான் கேட்டு விளையாடுவோம் அல்லவா..? அதேபோல் பள்ளி குழந்தைகள் முதல் அனைவருமே இந்த விடுகதை சொல்லி விளையாடுவது வழக்கம் தான். அப்படி நம்மை யோசிக்க வைக்கும் விடுகதையாக இருப்பதை விட அதற்காக  பதில்கள் சொல்லும் போது அது நகைச்சுவையாக இருந்தால் இன்னும் சிரிப்பாகவும், மகிழ்ச்கியாகவும் இருக்கும். ஆகவே அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சிரிக்கவைக்கும் விடுகதைகள்:

இடி இடிக்கும் மின்னல் மின்னும் ஆனால் மழை பெய்யாது அது என்ன.?

பதில்: பட்டாசு

ஒய்வு எடுக்காமல் இயங்கும்..! ஆனால் ஒய்வு எடுத்தால் மறுபடியும் இயக்காது அது என்ன.?

பதில்இதயம்  

எடுக்க எடுக்க வளரும் எண்ணெயை கண்டால் பதிந்து விடும் அது என்ன.?

பதில்: முடி 

காலையில் வந்த விருந்தாளி மாலையில் காணவில்லை அது என்ன.?

பதில்: சூரியன் 

முத்து கோட்டைக்குள் மகாராணி சிறையில் வைக்கப்பட்டிருக்கும்.?

பதில்: நாக்கு 

பேசுவது கேட்கும் ஆனால் யார் என்று தெரியாது அது யார்.? 

பதில்: வானொலி பெட்டி 

பார்ப்பதற்கு வெறும் தாள் தான். ஆனால் இவனுக்கு மட்டும் மதிப்பு அதிகம் அது யார்.?

பதில்: பணம் 

குளித்தால் கருப்பு குளிக்காவிட்டால் சிவப்பு அவன் யார்.?

பதில்: நெருப்பு 

பக்கத்தில் உள்ள பட்டனை பார்க்க முடியாது அது என்ன?

பதில்: முதுகு 

பறிக்க பறிக்க பெரிதாகும் அது என்ன?

பதில்: பள்ளம் 

ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி அது என்ன..?

பதில்: இடியாப்பம் 

ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடும்.
அது என்ன..?

பதில்: மத்து 

அனைத்து இடத்திற்கும் ஆடாமல் அசையாமல் கொண்டு சேர்க்கும் அது என்ன.? 

பதில்: தண்டவாளம் 

ஆயிரம் அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மிட்டாய்க் கடை. அது என்ன?

பதில்: தேன்கூடு 

விட்டம் போட்டு வீடு கட்டியும், விசிறி மாட்ட இடம் இல்லை. அது என்ன?

பதில்: மூக்கு

பொட்டுப்போல் இலை இருக்கும், குச்சிபோல் காய் காய்க்கும். அது என்ன?

பதில்: முருங்கக்காய் 

யாரும் ஏற முடியாத மரம், கிளைகள் இல்லாத மரம். அது என்ன மரம்?

பதில்: வாழை 

குண்டு முழி ராஜாவுக்குக் குடல் எல்லாம் பற்கள். அது என்ன?

பதில்: மாதுளை 

மூன்று பெண்களுக்கும் ஒரே முகம். மூத்தப் பெண் ஆற்றிலே, நடுப் பெண் காட்டிலே, கடைசிப் பெண் வீட்டிலே! அவர்கள் யார்?

பதில்: முதலை, உடும்பு, பல்லி

மேலும் படிக்க கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்
குழந்தைகளுக்கான விடுகதைகள்
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்
விடுகதைகள் | Vidukathaigal
பாட்டி விடுகதைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil