லாபம் தரக்கூடிய பண்ணை சார்ந்த தொழில்கள் | Farming Business Ideas in Tamil

பண்ணை சார்ந்த தொழில்கள் | Small Farm Business Ideas in Tamil

இன்றைய சூழலில் மக்கள் அனைவருமே சொந்தமாக தொழில் செய்து அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள் அதற்கான முயற்சியையும், எந்த மாதிரியான தொழிலை செய்ய போகிறீர்களோ அதை பற்றி மற்றவர்களிடம் கலந்துரையாடி, அந்த தொழிலை செய்வது நல்லது. ஒரு சிலருக்கு இப்போது விவசாயம் சார்ந்த தொழில்கள் மீது ஆர்வம் வந்துள்ளது. பண்ணை சார்ந்த தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சிறு முதலீட்டை வைத்து பண்ணை சார்ந்த சுய தொழிலை துவங்கலாம். நாம் இந்த பதிவில் தினமும் லாபம் தரக்கூடிய பண்ணை சார்ந்த தொழில்களை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

மாட்டு பண்ணை (Cow Farming in Tamil):

Small Farm Business Ideas in Tamil

 • Small Farm Business Ideas in Tamil: விவசாயம் சார்ந்த தொழில்களில் ஒரு சிறந்த தொழில் என்றால் அது மாட்டு பண்ணை தான்.
 • ஊட்டச்சத்து அதிகம் உள்ள பாலை தான் அனைவரும் வாங்கி சாப்பிட ஆசைப்படுவார்கள், அதனால் உங்களுக்கு எப்போதும் இந்த தொழிலுக்கான மதிப்பு இருந்து கொண்டே இருக்கும்.
 • இதற்கான முதலீடு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை தேவைப்படும். இலாபம் 60% – 70% வரை கிடைக்கும்.

இறால் வளர்ப்பு (Prawn Farming in Tamil):

Farming Business Ideas in Tamil

 • Farming Business Ideas in Tamil: இந்த தொழில் முதலில் கடல் மற்றும் ஏரி ஓரங்களில் தான் நடத்தப்பட்டு வந்தது. இப்பொழுது இறால் வளர்ப்பு நல்ல வருமானம் தருகிறது என்பதால் பெரும்பாலான இடங்களில் செய்யப்பட்டு வருகிறது.
 • இந்த தொழில் செய்வதற்கு உங்களிடம் தண்ணீர் வசதி வேண்டும். ஒரு சிறிய குட்டையை சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்தில் அமைத்து இறால் வளர்ப்பு செய்து வருமானத்தை பெறலாம்.
 • இதற்கு முதலீடு 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை தேவைப்படும். லாபம் 70% – 80% வரை கிடைக்கும்.

காடை வளர்ப்பு (Quail Farming in Tamil):

Money Making Agriculture Business Ideas in Tamil

 • காடை வளர்ப்பு தொழிலுக்கு உங்களுக்கு அதிகம் இடம் தேவையில்லை. காடை பறவைகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் நோய்வாய்படும் என்று பயப்பட தேவையில்லை.
 • இதை நீங்கள் 1 அல்லது ஒன்றரை மாதத்திற்குள் விற்பனை செய்துவிடலாம். இந்த தொழிலுக்கான முதலீடு 10,000 முதல் 30,000 வரை தேவைப்படும். வருமானம் 80% – 90% வரை கிடைக்கும்.

வாத்து வளர்ப்பு (Duck Farming in Tamil):

Farming Business Ideas in Tamil

 • Farming Business Ideas in Tamil: குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற கூடிய தொழிலில் இதுவும் ஒன்று. இதற்கு போதுமான அளவு இடமும், தண்ணீர் வசதியும் இருந்தால் போதும்.
 • இதில் நீங்கள் வாத்து மற்றும் அதன் முட்டை இரண்டையும் விற்பனை செய்து இரட்டிப்பு இலாபத்தை பெறலாம். முதலீடு Rs.40,000 – Rs.1,00,000 லட்சம் வரை தேவைப்படும். லாபம் 80% – 85% வரை வரும்.

உலர்ந்த மலர் விற்பனை (Dry Flowers Business):

Money Making Agriculture Business Ideas in Tamil

 • Money Making Agriculture Business Ideas in Tamil: பூக்கள் வளர்ப்பு பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் மலர்கள் விரைவில் கெடும் பொருள் என்பதால் அதற்கு மாற்றாக நீங்கள் உலர்ந்த மலர்களுக்கு தேவையான வண்ணங்கள் கொடுத்து அலங்கார மலர்களாக்கி, நீண்ட காலத்திற்கு விற்பனை செய்ய முடியும்.
 • இலைகள், தண்டுகள், காய்கள் போன்றவற்றையும் அலங்காரத்திற்கு உபயோகப்படுத்த முடியும்.

மூலிகை செடி விற்பனை (Herbal Farm Business in Tamil):

பண்ணை சார்ந்த தொழில்கள்

 • Farming Business Ideas in Tamil: மூலிகைகள் சார்ந்த செடிகளை வளர்ப்பது மிகவும் நல்லது அதே சமயத்தில் நல்ல லாபத்தையும் பெற்று தரக்கூடியது.
 • மூலிகை செடிகள் பற்றி ஓரளவிற்கு உங்களுக்கு தெரிந்தால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம்.
 • இதற்கு போதுமான நிலம் இருக்க வேண்டும். துளசி, தூதுவளை, ஆடாதோடை போன்ற மூலிகை செடிகளை வளர்க்கலாம்.
காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி?

இயற்கை உரம் (Natural Fertilizer):

Farming Business Ideas in Tamil

 • Money Making Agriculture Business Ideas in Tamil: குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் விவசாய தொழிலில் இதுவும் ஒன்று. பெண்கள் இந்த தொழிலை வீட்டில் இருந்தே செய்யலாம்.
 • மாட்டு சாணம், இலை கழிவுகள் போன்றவற்றை வைத்து எளிமையாக இயற்கை உரம் தயாரிக்கலாம். இயற்கை உரங்களை சந்தைகளில் விற்பனை செய்து நல்ல வருமானத்தை பெற முடியும்.
 • இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முதலீடு பற்றிய விவரம் தோராயமாக கொடுக்கப்பட்டுள்ளது.
 • நீங்கள் தொழிலை சிறிய அளவில் தொடங்கினால் குறைவான முதலீடு தேவைப்படலாம், பெரிய அளவில் தொழில் தொடங்கினால் அதிக அளவு முதலீடு தேவைப்படலாம்.
விவசாயம் சார்ந்த 10 அருமையான சுய தொழில்கள்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Siru Tholil Ideas in Tamil 2022