SBI வங்கியில் கார் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், தகுதிகள் பற்றி தெரியுமா.?

Advertisement

sbi Bank Vehicle Loan Details

வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவரிடமும் இருக்கும். அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காக வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெறுகிறார்கள். அப்படி வாங்கும் கடன்களில் வாகன கடனும் ஒன்று. வசதியானவர்களாக இருந்தாலும் சரி, இல்லாதவராக இருந்தாலும் சரி வாகனம் வாங்குவதற்காக கடன் பெறுகிறார்கள். இந்த கடன் வாங்குவதற்கு தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

கார் கடன் வாங்குவதற்கு தகுதிகள்:

சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்யும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், விவசாயம் செய்பவர்கள் கூட SBI கார் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். 

வகை  சம்பளம் பெறுபவர்கள்  தொழில் செய்பவர்கள்  விவசாயம் செய்பவர்கள் 
வயது 21-67 ஆண்டுகள் 21-67 ஆண்டுகள் 21-67 ஆண்டுகள்
வருமானம் ஆண்டு சம்பளம் 3 லட்சமாக இருக்க வேண்டும். ஆண்டுக்கு 4 லட்சம் வருமானம் இருக்க வேண்டும். (உங்கள் மனைவி, மகன், மகள், சகோதரி அல்லது சகோதரர் போன்ற இணை விண்ணப்பதாரர்களின் வருமானத்தை நீங்கள் இணைக்கலாம்) விண்ணப்பதாரர் மற்றும்/அல்லது இணை விண்ணப்பதாரரின் நிகர ஆண்டு வருமானம், ஏதேனும் இருந்தால், ₹ 4 லட்சமாக இருக்க வேண்டும்
கடன் தொகை மாத சம்பளத்தின் 48 மடங்கு ITR-ன் படி 4 மடங்கு ஆண்டு வருமானத்தின் 3 மடங்கு

கடன் எவ்வளவு பெறலாம்:

BI கார் கடன் புதியகார்களுக்கு ஆன்-ரோடு விலையில் 90% வரை கடன் தொகையை வழங்குகிறது.

ஆன்-ரோடு விலை என்பது, பதிவு, சாலை வரி, காப்பீடு மற்றும் பாகங்கள் ஏதேனும் இருந்தால், எக்ஸ்-ஷோரூம் விலையின் கூட்டுத்தொகையாகும். பயன்படுத்திய கார்களைப் பொறுத்தவரை, மதிப்பீட்டுத் தொகையில் 80%-க்கு சமமான தொகை வங்கியால் நிதியளிக்கப்படும்.

வட்டி:

கார் கடனுக்கு 7.20%-7.90% வரை வட்டி அளிக்கப்படுகிறது.

கடன் காலம்: புதிய கார்களுக்கு 1 முதல் 7 ஆண்டுகளும், பழைய கார்களுக்கு 1 முதல் 5 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்:

சம்பளம் வாங்கும் நபர்கள்:

  • கடந்த 6 மாத வங்கி ஸ்டேட்மென்ட்
  • 2 சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
  • அடையாளச் சான்று – ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர்
  • அடையாள அட்டை
  • முகவரி சான்று – பயன்பாட்டு பில்கள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை
  • சமீபத்திய சம்பள ரசீது
  • கடந்த 2 ஆண்டுகளின் IT ரிட்டர்ன்ஸ்.

சுயதொழில் செய்பவர்கள்:

  • அடையாளச் சான்று – ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை
  • முகவரி சான்று – பயன்பாட்டு பில்கள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை
  • கடந்த 6 மாத வங்கி ஸ்டேட்மென்ட்
  • 2 சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
  • சமீபத்திய சம்பள சீட்டு.
  • நிறுவன பதிவு சான்றிதழ்.
  • தணிக்கை செய்யப்பட்ட இருப்பு நிலை.
  • கடந்த 2 ஆண்டுகளின் IT ரிட்டர்ன்ஸ்.

விவசாயம் செய்பவர்கள்:

  • 2 சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
  • கடந்த 6 மாத வங்கி ஸ்டேட்மென்ட்
  • அடையாளச் சான்று – ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை
  • முகவரி சான்று – பயன்பாட்டு பில்கள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை
  • விவசாய நடவடிக்கைக்கான அரசு அங்கீகாரம் பெற்ற சான்று
SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை..!
ICICI வங்கியில் வீட்டு லோன் பெறுவதற்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement