விற்பனையில் முதலிடத்தில் இருப்பது Baleno. நமது பட்ஜெட்டுக்கு ஏற்ற கார் Baleno.

Advertisement

Maruti Suzuki Baleno

நாம் அனைவருக்கும் கார்க்ளின் மீது எப்போதும் ஒரு ஆசை இருக்கும். அதுவும் சொந்த கார் நமது பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்னும் கனவும் இருக்கும். இப்படி நமக்கு விருப்பமான எந்த ஒரு பொருளை வாங்கவும் பட்ஜெட் போட்டு கொண்டிருப்போம். நமது விருப்பமான பொருளை வாங்க நீண்ட காலமாக சேமித்தும் கொண்டு இருப்போம். அப்படி சேமித்து கார் வாங்க வேண்டும் ஆசை உள்ளவர்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் மூலம் கார் பற்றிய தகவல்களை வழங்கி வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மூலம் Maruti Suzuki Baleno கார் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள போகின்றோம். இந்த பதிவில் Maruti Suzuki Baleno காரின் வடிவமைப்பு, சிறப்பம்சம் மற்றும் இதன் தொழில்நுட்பம் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளுவோம் வாருங்கள்.

Maruti Suzuki Baleno Review in Tamil:

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) நீண்ட காலமாக விற்பனையில் உள்ளது.

1999ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட Baleno sedan கார் முதல் Maruti Suzuki Baleno மீது ஆர்வம் அதிகமாகவே உள்ளது.

1999 ம்  ஆண்டு அறிமுகப்படுத்த பட்ட Maruti Suzuki Baleno sedan கார் 2015-ல் மீண்டும் Hatchback வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

விற்பனையில் முதலிடத்தில் இருப்பது Baleno

இந்த காரும் மக்கள் மிகவும் விரும்பும் காரக மாறியது. Maruti Suzuki Baleno கார் விற்பனை மாற்ற போட்டியாளர்களை விட மிகவும் அதிகமாக நீண்ட நாட்களாக உள்ளது. இதற்கு காரணம் துல்லியமான வடிவமைப்பும் அதற்கான விலைப்பட்டியலும் தான்.

2022 Baleno காரை Maruti Suzuki மேம்படுத்தி அறிமுகப்படுத்தியது. இந்த கார் 9 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணங்களில் சந்தையில் கிடைக்கிறது.

இந்த Baleno கார் Petrol மாற்றும் CNG என இரண்டு வகைகளிலும் பொருந்தும் விதம் உள்ளது.

baleno

இந்த Maruti Suzuki Baleno காரின் ஆரம்ப விலை ரூ.6.61 லட்சம் முதல் கிடைக்கிறது.  மேலும், இதன் Maruti Suzuki Baleno உயர்தர மாடல் விலை ரூ. 9.88 லட்சம் ரூபாய் ஆகும்.

Maruti Suzuki Baleno ஆனது,  1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் (90PS/113Nm) மூலம் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

CNG முறையில், அதே யூனிட் 77.49பிஎஸ் மற்றும் 98.5என்எம் ஆற்றலை வெளிப்படுத்துகிறது

Maruti Suzuki Baleno கார் லிட்டருக்கு 20.94 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கிறது.

இந்திய சாலைக்கு ஏற்ற EV கார் TATA Nexon EV நமது பட்ஜெட் விலையில் !

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 

 

Advertisement