ஆசை படத்தின் மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள்..! | Meenamma Song Lyrics in Tamil

Advertisement

Meenamma Song Lyrics in Tamil

பொதுவாக மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மனநிலை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் ஒரு சில நேரங்களில் நமது மனமானது மிகவும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடும். அதேபோல் ஒரு சில நேரங்களில் நமது மனமானது மிகவும் வருத்தத்தில் இருக்கும். இந்த இரண்டு நிலைகளிலும் நமது மனமானது தன்னை அசுவாசம்படுத்திக் கொள்ள பலவகையான முயற்சிகளை மேற்கொள்வோம். அப்படி செய்யும் பல முயற்சிகளில் ஒன்று தான் பாடல் கேட்பது. இப்படி நமது மனதிற்கு ஆறுதல் அளிக்கின்ற பாடலை ஒரு சிலருக்கு கேட்பது பிடிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு பாடலை பாடுவது மிக பிடிக்கும். அப்படி நமது மனதிற்கு நெருக்கமான பாடல்களை முழுமையாக பாட வேண்டும் என்றால் அதற்கு முதலில் அந்த பாடலின் வரிகள் அனைத்தும் நமக்கு முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் நாம் படத்தின் மீனம்மா அதிகாலையிலும் பாடலின் வரிகளை பதிவிட்டுள்ளோம்..

மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள்:

Meenamma paadal varigal

BGM

ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…
உந்தன் ஞாபகமே…

பெண் : அம்மம்மா… முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை…
எல்லாம் ஒரு காவியமே…

ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும்…
சின்னச் சின்ன மோதல்களும்…
மின்னல் போல வந்து வந்து போகும்…

பெண் : ஊடல் வந்து மோதல் வந்து…
முட்டிக் கொண்டபோதும்…
இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்…

ஆண் : இரு மாதங்கள் நாட்கள் செல்ல…

பெண் : ஆஆஆ…

ஆண் : நிறம் மாறிடும் பூக்கள் அல்ல…

பெண் : ஆஆஆ…

ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…
உந்தன் ஞாபகமே…

BGM

ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில்…
ஒளி சிந்தும் ராத்திாியில்…
இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல்…
புது வித்தை காட்டிடவா…

பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு…
தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு…
அதை மூடாமல் தாழ் போடாமல்…
எனைத் தொட்டுத் தீண்டுவதா…

ஆண் : மாமன்காரன்தானே மாலை போட்ட நானே…
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்…
மீனம்மா… மழை உன்னை நனைத்தால்…
இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்…

பெண் : அம்மம்மா… வெயில் உன்னை அடித்தால்…
இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்துவிடும்…

BGM

ஆண் : அன்று காதல் பண்ணியது…
உந்தன் கன்னம் கிள்ளியது…
அடி இப்போதும் நிறம் மாறாமல்…
இந்த நெஞ்சில் நிற்கிறது…

பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்…
நகை நட்டு பாத்திரமும்…
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே…
அது கண்ணில் நிற்கிறது…

ஆண் : ஜாதிமல்லிப் பூவே…
தங்க வெண்ணிலாவே…
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு…

BGM

ஆண் : மீனம்மா… உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும்…
தென்றல் காத்திருக்கு…

பெண் : அம்மம்மா… உன்னை காதலித்து புத்தி பேதலித்து…
புஷ்பம் பூத்திருக்கு…

BGM

பாடலை பற்றிய குறிப்பு:

படத்தின் பெயர்: ஆசை

படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி: அஜித், சுவலட்சுமி

பாடலாசிரியர்: வாலி

பாடகர்கள்: பி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர்: தேவா

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com

 

Advertisement