Hollywood Movies Filmed in India
பொதுவாக உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு ஹாலிவுட் படம் என்றால் மிகவும் பிடிக்கும். ஹாலிவுட் படத்திற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அசாத்தியமான மேக்கிங், அசத்தலான ஆக்ஷன் சீன்கள் என பிரமிக்க வைக்கும் படைப்புகளை உருவாக்குவதில் ஹாலிவுட் சினிமாவை மிஞ்ச வேறு எந்த சினிமாவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பெரிய அளவில் வியக்கவைக்க வைக்கும் அளவிற்கு எடுக்கப்படும் பெரும்பாலான ஹாலிவுட் படங்களில் உயர்தரமான தொழில்நுட்பங்கள் அடங்கிய கேமராக்கள் மற்றும் சிஜி தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு படத்தை தயாரிக்க படக்குழுவினர் வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு இடங்களுக்கு பயணிப்பது வழக்கம். அதன்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹாலிவுட் படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்டில் எந்தெந்த படங்கள் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..
தி டார்ஜிலிங் லிமிடெட் – Darjeeling Limited:
2007 ஆம் ஆண்டு வெளியான படம் தி டார்ஜிலிங் லிமிடெட். இப்படம் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. குறிப்பாக உதைப்பூர், ஜோத்பூர் ஆகிய நகரங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. வெஸ் ஆண்டர்சன் இயக்கிய அமெரிக்க நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும் இது அவர் ஸ்காட் ருடின், ரோமன் கொப்போலா மற்றும் லிடியா டீன் பில்ச்சர் ஆகியோருடன் இணைந்து தயாரித்தார் மற்றும் ரோமன் கொப்போலா மற்றும் ஜேசன் ஸ்வார்ட்ஸ்மேன் ஆகியோருடன் இணைந்து எழுதியுள்ளார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாடல்கள் இல்லாமல் வெளிவந்த தமிழ் திரைப்படம்..!
தி நெம்சாக் – The Namesake:
கடந்த 2006ம் ஆண்டு வெளியான படம் தி நெம்சாக். இப்படம் முழுவதும் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. ஜும்ப்பா லாஹிரி எழுதிய த நேம்சேக் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மீரா நாயர் இயக்கிய திரைப்படம். இர்பான் கான், தபு, கால் பென் (Kal Penn) ஆகியோர் நடித்துள்ளனர்.
லைப் ஆப் பை:
2012ம் ஆண்டு வெளியான படம் லைப் ஆப் பை. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது. சிறந்த படம், சிறந்த நடிகர் என பல விருதுகளை இப்படம் குவித்தது.
தி டார்க் நைட் ரைசஸ்:
தி டார்க் நைட் ரைசஸ் என்பது கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 2012 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமாகும் , அவர் தனது சகோதரர் ஜொனாதன் நோலனுடன் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளார் மற்றும் டேவிட் எஸ். கோயருடன் கதையை. டிசி காமிக்ஸ் பாத்திரமான பேட்மேனை அடிப்படையாகக் கொண்டது, இது நோலனின் தி டார்க் நைட் ட்ரைலாஜியின் இறுதித் தவணை மற்றும் தி டார்க் நைட் (2008) இன் தொடர்ச்சி. இப்படம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது
டெனெட்:
2020 ஆம் ஆண்டில் வெளியாகிய உளவுத் திரைப்படமாகும். இத்திரைப்படம் கிறிஸ்டோபர் நோலன் ஆல் எழுதி இயக்கப்பட்டுள்ளது. ஜான் டேவிட் வாசிங்டன், ராபர்ட் பாட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, டிம்பிள் கபாடியா, மைக்கேல் கெய்ன், மற்றும் கென்னத் பிரனா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையின் முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆசை படத்தின் மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள்..!
எக்ஸ்ட்ராக்சன்:
2020 ஆம் ஆண்டு சாம் ஹர்கிரேவ் இயக்கியஒரு அமெரிக்க அதிரடி திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தில் வரும் பெரும்பாலான ஆக்ஷன் காட்சிகள் மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களில் படமாக்கப்பட்டது.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |