Vaseegara Song Lyrics in Tamil
இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே தங்களது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட தருணங்களில் மிக மிக வருத்தமான நிகழ்வுகள் நிகழும் அதனால் அந்த நேரங்களில் நமது மனமானது மிகவும் வருத்தம் மற்றும் சோர்வுடன் இருக்கும். அப்பொழுது நமக்கு ஆறுதல் தரும் ஏதாவது ஒரு விஷயத்தை நாம் தேடுவோம். அப்படி நமது மனதை ஆறுதல் படுத்த உதவும் பல விஷயங்களில் ஒன்று தான் தங்களுக்கு பிடித்தமான பாடலை கேட்பது. இப்படி நமது மனதிற்கு ஆறுதல் அளிக்கின்ற பாடலை ஒரு சிலருக்கு கேட்பது பிடிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு பாடலை பாடுவது மிக பிடிக்கும். அப்படி நமது மனதிற்கு நெருக்கமான பாடல்களை முழுமையாக பாட வேண்டும் என்றால் அதற்கு முதலில் அந்த பாடலின் வரிகள் அனைத்தும் நமக்கு முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் அல்ல வா . அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் நாம் படத்தின் வசீகரா என் நெஞ்சினிக்க பாடலின் வரிகளை பதிவிட்டுள்ளோம்..
வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்:
—BGM—
பெண் : வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…
—BGM—
பெண் : வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…
பெண் : நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்…
உன் தயவால்தானே…
ஏங்குகிறேன் தேங்குகிறேன்…
உன் நினைவால் நானே நான்…
—BGM—
பெண் : அடை மழை வரும் அதில் நனைவோமே…
குளிர் காய்ச்சலோடு சிநேகம்…
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்…
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்…
அது தெரிந்தும் கூட அன்பே…
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்…
பெண் : எங்கேயும் போகாமல்…
தினம் வீட்டிலேயே நீ வேண்டும்…
சில சமயம் விளையாட்டாய்…
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்…
பெண் : வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…
—BGM—
பெண் : தீரும்… தீரும்…
—BGM—
பெண் : தினமும் நீ குளித்ததும் என்னை தேடி…
என் சேலை நுனியால் உந்தன்…
தலை துடைப்பாயே அது கவிதை…
திருடன் போல் பதுங்கியே திடீரென்று…
பின்னாலிருந்து என்னை…
நீ அணைப்பாயே அது கவிதை…
பெண் : யாரேனும் மணி கேட்டால்…
அதை சொல்லக்கூடத் தெரியாதே…
காதலெனும் முடிவிலியில்…
கடிகார நேரம் கிடையாதே…
பெண் : வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…
பெண் : நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்…
உன் தயவால்தானே…
ஏங்குகிறேன் தேங்குகிறேன்…
உன் நினைவால் நானே நான்…
—BGM—
பாடலை பற்றிய சில குறிப்பு:
திரைபடத்தின் பெயர்: மின்னலே
படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி: மாதவன், ரீமாசென்
பாடலாசிரியர்: தாமரை
பாடகர்: பாம்பே ஜெயஸ்ரீ
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
பச்சை கிளிகள் தோளோடு பாடல் வரிகள்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |