வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பச்சை கிளிகள் தோளோடு பாடல் வரிகள்..!

Updated On: August 4, 2023 12:07 PM
Follow Us:
pachai kiligal tholodu song lyrics in tamil
---Advertisement---
Advertisement

பச்சை கிளிகள் தோளோடு பாடல் வரிகள்

பொதுவாக நாம் எப்போதும் நம்முடைய மனது கவலையில் இருக்கும் போதும் அல்லது தனிமையில் இருக்கும் போதும் எப்போதும் பாடல் கேட்டால் நன்றாக இருக்கும் என்பதை தான் விரும்பும். அதிலும் சிலருக்கு இத்தகைய நேரங்களில் பிடித்த பாடலை கேட்டால் மட்டுமே மன அமைதி ஏற்படும் என்பது ஒரு பழக்கமாகவே இருக்கும். ஏனென்றால் பாடல்களில் நிறைய வகைகள் இருக்கிறது. அதேபோல் ஒவ்வொருவரும் தனக்கு நெருக்கமானவருக்கு, குடும்பத்தினருக்கு மற்றும் அம்மா, அப்பா என இவர்களுக்கு சில பாடலை டெடிகேட் செய்வார்கள். அந்த வகையில் பார்த்தால் பச்சை கிளிகள் தோளோடு என்ற பாடலானது குடும்பத்தில் உள்ள ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியினை தருணத்தை மிகவும் எளிமையாக கூறும் விதமாக அமைந்து இருக்கும். ஆகவே இன்று பச்சை கிளிகள் தோளோடு என்ற பாடல் வரிகளை தான் பார்க்க போகிறோம்.

வாடி என் தங்க சேல பாடல் வரிகள் ..

Pachai Kiligal Tholodu Song Lyrics:

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு – அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு – அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் – அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் – நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் – என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு – அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு – அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

இதர தகவல்:

  1. படத்தின் பெயர்- இந்தியன்
  2. பாடலாசிரியர்- வைரமுத்து
  3. இசை அமைப்பாளர்- ஏ.ஆர். ரகுமான்
  4. பாடகர்- கே.ஜே.யேசுதாஸ்

வா வாசுகி பாடல் வரிகள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now