முருங்கை மரத்தை வாசலில் வளர்க்க கூடாது என்று சொல்ல உண்மை காரணம் என்ன தெரியுமா..?

Advertisement

Why Not Grow Moringa Tree At The Door in Tamil

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா..? அப்போ உங்களுக்கு தான்  இந்த பதிவு. பொதுவாக நாம் சிறு குழந்தைகளாக இருக்கும் போது நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், நாம் ஏதாவது செய்தால் அதை செய்ய கூடாது என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு, நாம் ஆறு மணிக்கு மேல் நகம் வெட்டினால் சாமி கண்ணை குத்தும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு பின் கண்டிப்பாக ஒரு அறிவியல் காரணம் மறைந்திருக்கும். சரி பொதுவாக நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முருங்கை மரத்தை வீட்டு வாசலில் வளர்க்க கூடாது என்று சொல்வார்கள். அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம் வாங்க..!

ஏன் இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்கிறார்கள் காரணம் தெரியுமா..?

வாசலில் முருங்கை மரம் ஏன் வளர்க்க கூடாது..? 

Why Not Grow Moringa Tree At The Door

பொதுவாக முருங்கை மரம் என்பது நம் அனைவரின் வீடுகளிலும் இருக்கும். அப்படி முருங்கை மரத்தை நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வீட்டு வாசலில் வளர்க்க கூடாது என்று சொல்வார்கள். நாம் குழந்தையாக இருக்கும் போது ஏன் என்று கேட்டால், முருங்கை மரம் வாசலில் இருந்தால் பணம் வராது. கஷ்டங்கள் வந்து சேரும் என்று சொல்வார்கள்.

ஆனால் உண்மை காரணம் அது கிடையாது. உண்மையான காரணம் என்னவென்று இங்கே காணலாம்.

பொதுவாக மரங்களில் முருங்கை மரம் வலிமையற்ற மரமாக இருக்கிறது. அதாவது மற்ற மரங்களை போல முருங்கை மரம் வலிமை உள்ளதாக இருக்காது. ஏதாவது புயலோ அல்லது வேகமாக காற்றடித்தால் கூட முறிந்துவிடும். குழந்தைகள் அந்த மரத்தில் ஏறினால் கூட மரம் உடனே முறிந்து விழும் தன்மை கொண்டது. அது மட்டுமில்லாமல் மழைக்காலங்களில் அந்த மரத்தில் கம்பளி பூச்சிகள் அதிகமாக உற்பத்தி ஆகி வீடுகளில் நுழையும் வாய்ப்புகள் அதிகம். 

இந்த காரணங்களால் தான் வீட்டின் முன் முருங்கை மரத்தை வளர்க்க கூடாது என்று சொன்னார்கள்.

6 மணிக்கு மேல் ஏன் எண்ணெய், ஊசி, இரும்பு போன்ற பொருட்களை தர கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement