இதற்கு காரணம் என்ன தெரியுமா..?
வணக்கம் பிரண்ட்ஸ்..! பொதுவாக நம் அன்றாட வாழ்வில் தினமும் எவ்வளவோ விஷயங்கள் நடக்கிறது. அதாவது நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நாம் செய்யும் சிறிய செயலுக்கு கூட ஏதாவது ஒரு காரணத்தை வச்சிருப்பார்கள். அதாவது நாம் நகம் கடித்தால் அது தரித்திரியம் என்று சொல்வார்கள். இப்படி சொல்வதற்கு பின் நம் முன்னோர்கள் சொல்லித் தந்த ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக ஒளிந்திருக்கும். அப்படி இருக்கும் காரணங்களை நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நம் முன்னோர்கள் மறைத்து வைத்த ஒரு காரணத்தை தான் பார்க்க போகிறோம். வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்குமா |
6 மணிக்கு மேல் எண்ணெய், ஊசி, இரும்பு தர கூடாது..? ஏன்..?
பொதுவாக நம் வீட்டிலும் சரி மற்றவர்கள் வீட்டிலும் சரி 6 மணிக்கு மேல் எந்த பொருட்களையும் மற்றவர்களுக்கு தர மாட்டார்கள். அதாவது எண்ணெய், ஊசி, இரும்பு பொருட்கள், தயிர் போன்ற பொருட்களை 6 மணிக்கு மேல் யார் கேட்டாலும் கொடுக்க கூடாது என்று சொல்வார்கள்.
நாம் சிறுவயதில் ஏன் என்று கேட்டால், இவற்றை மற்றவர்க்கு 6 மணிக்கு மேல் கொடுத்தால் வீட்டில் பணம் சேராது, வறுமை வந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அதற்கு உண்மையான காரணம் என்னெவென்று உங்களுக்கு தெரியுமா..?
ஏன் இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்கிறார்கள் காரணம் தெரியுமா..? |
அந்த காலத்தில் மின்சார வசதி கிடையாது. அப்படி இருக்கும் போதும் நாம் எண்ணெய், தயிர் போன்ற வலுக்கும் பொருட்களை கொடுக்கும் போது, அது தவறுதலாக கீழே கொட்டி விட்டால், இருட்டில் வருபவர்கள் அதில் கால் வைத்து வழுக்கிவிழ நேரிடும். அதனால் தான் அந்த காலங்களில் எண்ணெய், தயிர் போன்ற பொருட்களை கொடுக்க மாட்டார்கள்.
அதேபோல நாம் ஊசி, ஆணி போன்ற இரும்பு பொருட்களை இரவு நேரங்களில் கொடுக்கும் போது, அது கீழே விழுந்தால் யார் காலிலாவது குத்தி காயத்தை ஏற்படுத்தும். இதனால் தான் இரும்பு பொருட்களை கொடுக்க கூடாது என்று சொன்னார்கள்.
ஆனால் அந்த காலத்தில் மின்சார வசதி கிடையாது. அதனால் அப்படி சொன்னார்கள். ஆனால் இப்போது தான் அனைத்தும் இடங்களிலும் மின்சார வசதி இருக்கிறதே. அப்பறம் என்ன..!
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |