இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்குமா.!

Advertisement

இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்குமா.!

நம் முன்னோர்கள் காலத்திலிருந்து இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்கும் என்று சொல்வார்கள். இதனால் இளைஞர்கள் இரட்டை வாழைப்பழத்தை சாப்பிட மாட்டார்கள். ஆனால் உண்மையில் இரட்டை வாழைப்பழத்தை சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்குமா என்ற சந்தேகம் உள்ளது. அதனால் தான் இந்த பதிவில் அதற்கான பதிலை அறிந்து கொள்வோம் வாங்க..

இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்குமா.!

நம் வீட்டில் உள்ளவர்கள் பெரியவர்கள் வரை அனைவருமே இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள். இதயம் நாமும் நம்பி அதனை சாப்பிட மாட்டோம். இன்னமுமா இதெல்லாம் நம்பிகிட்டு இருக்கீங்க அப்படின்னு கேட்டால் ஆமாம் நம்புறோம் என்று பல பேர் சொல்வதை உணர்கிறேன். இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்கும் என்பது மூட நம்பிக்கை நண்பர்களே அதற்கான அறிவியல் காரணத்தை அறிந்து கொள்வோம்.

ஏன் இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்கிறார்கள் காரணம் தெரியுமா..?

இரட்டை வாழைப்பழம் ஏன் சாப்பிட கூடாதுநாம் சாப்பிடும் உணவு பொருட்கள் ஆனது செரித்த பின் இரைப்பை பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல் வழியாக வெளியேறும். குழந்தை பிறப்பதோ கருப்பையில். கருப்பைக்கும், இரைப்பைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இன்னும் சொல்ல போனால் இரட்டை வாழைப்பழம் சாப்பிடாதவர்களுக்கு கூட இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. அது போல இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டவர்களுக்கு கூட இரட்டை குழந்தை பிறக்கவில்லை. அதனால் நீங்கள் தாராளமாக இரட்டை வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

வாழைப்பழத்தில் என்ன சத்துக்கள் உள்ளதோ அதே போல் அதே போல தான் இரட்டை வாழைப்பழத்திலும் அதே சத்துக்கள் தான் உள்ளது.

இன்னும் தெளிவாக சொல்ல போனால் ஆண் மற்றும் பெண் உயிர் அணுக்கள் இணையும் போது ஏற்படும் சில சூழ்நிலை காரணங்களால் உருவாகும் கரு இரண்டாகப் பிரிகிறது அல்லது இரண்டு கரு உருவாகிறது. அதன் பிறகு வழக்கமான முறையிலேயே அந்த கரு வளர்ந்து கனி ஆகிறது. இப்படி உருவான இரட்டை வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் எந்த ஒரு பாலியல் ரீதியான மாற்றமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அது பிறப்பிலேயே குரோமோசோம்கள் நீக்கப்ட்ட ஒரு பொருளாகும்.

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement