அரைக்கீரை தீமைகள்
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ்வதற்கு முக்கிய தேவையாக இருப்பது உணவு தான். உணவும் நீரும் காற்றும் இல்லை என்றால் நம்மால் இங்கு உயிர்வாழவே முடியாது. ஆனால் நாம் இன்றைய நிலையில் உணவையும், நீரையும் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இன்றைய நிலையில் காசு இருந்தால் தான் இந்த உலகில் உயிர்வாழவே முடியும். சரி அதை விடுங்க. இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். நாம் இப்போது நம் பதிவுக்கு வருவோம். உங்கள் வீட்டில் அரைக்கீரை வாங்குவார்களா..? அப்போ அதனால் ஏற்படும் தீமைகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பொன்னாங்கண்ணி கீரை நன்மைகள் |
அரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
என்னது அரைக்கீரையில் தீமைகளா என்று ஆச்சர்யமாக கேட்பீர்கள். ஏன் இவ்வளவு ஷாக் என்றால், பொதுவாக நம்மில் பலரது வீடுகளில் தினமும் அரைக்கீரை இல்லாமல் சமையலே நடக்காது. அந்தளவிற்கு தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று அரைக்கீரையை வாங்கி சமைப்பார்கள்.
காரணம் அதில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. குடல் புண்கள் விரைவில் குணமாகும். இது பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும். அதுபோல அரைக்கீரை இருமல், தொண்டைப் புண் போன்றவற்றை குணப்படுத்துகிறது. மேலும் இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
முருங்கை கீரை நன்மைகள் |
இருந்தாலும் நாம் இதை ஒரு அளவோடு தான் உட்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி சாப்பிடும் போது இது நமக்கு சில பக்கவிளைவுகளை கொடுக்கிறது. அப்படி இதனால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
என்னதான் அரைக்கீரையில் பல நன்மைகள் இருந்தாலும், இதில் ஆக்சலேட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் போன்ற சில இயற்கை ஊட்டச்சத்து எதிர்ப்பு கூறுகளைக் கொண்டுள்ளது. எனவே அரைக்கீரையை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது நமக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதில் இருக்கும் லைசினின் என்ற பக்கவிளைவு உடலின் கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. மேலும் இதில் இன்சுலின் அளவைக் குறைக்கும் திறன் உள்ளது. அதனால் இரத்தச் சர்க்கரைக் குறைவு உள்ளவர்களுக்கு, அதிக அளவு அரைக்கீரை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |