நோனி பழத்தின் நன்மைகள் | Noni Fruit Benefits in Tamil
இன்றைய ஆரோக்கியம் பதில் நோனி பழத்தின் நன்மைகள் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். நோனி பழத்தினை பற்றி தான் அதிகமாக கேள்வி பட்டிருக்கவோ அல்லது சாப்பிட்டு இருக்கவோ மாட்டோம். ஆனால் இதில் நமக்கு தெரியாத எண்ணற்ற தன்மை உள்ள மருத்துவகுணங்கள் நிறைந்து இருக்கிறது. இப்படிப்பட்ட நோனி பழம் ஆனது இந்திய மல்பெரி மற்றும் வெண் நுணா என்ற வேறு பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த பழம் காஃபி குடும்பம் என்ற குடும்பத்தினை சேர்ந்தவை ஆகும். மேலும் இந்த நோனி பழம் தென்கிழக்கு ஆசியாவை தாய்நாடாக கொண்டுள்ளது. இத்தகைய நோனி பழம் பற்றிய நன்மைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
நோனி பழத்தில் உள்ள சத்துக்கள்:
நோனி பழத்தில் வைட்டமின் A, வைட்டமின் B3, வைட்டமின் C, ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், பொட்டாசியம் என எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
நோனி பழத்தின் மருத்துவ குணங்கள்:
உணவு செரிமானம்:
நோனி பழத்தில் செல்லுலேஸ் மற்றும் பெக்டினேஸ் என்ற நொதிகள் உள்ளடங்கியுள்ளது. அதனால் இந்த பழத்தினை நாம் சாப்பிடுவதனால் அன்றாடம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவியினை எளிய முறையில் செரிமானம் அடையச் செய்கிறது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனை வராமலும் இருக்க உதவுகிறது.
உடல் வீக்கம் குறைய:
இத்தகைய பழத்தில் உள்ள குர்செடின் மற்றும் ஸ்கோபொலெடின் என்ற இரண்டும் அழற்சி எதிர்ப்பு பண்பினை கொண்டுள்ளது. ஆகவே இந்த பழத்தினை நாம் சாப்பிடுவதனால் நம்முடைய உடலில் உள்ள வீக்கம் கீல் வாதத்தினால் ஏற்படக்கூடிய வலிகள் மற்றும் கீல்வாதத்தினை சரி செய்ய சிறந்த ஒன்றாக உள்ளது.
ரம்புட்டான் பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா.
உடலின் ஆற்றல்:
அதேபோல் நோனி பழத்தினை நாம் தினமும் சாப்பிடுவதன் மூலம் உடல் சோர்வு அனைத்தும் நீங்கி உடல் ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்து நலமான வாழ்க்கையினை வாழ உதவுகிறது.
சரும பிரச்சனை நீங்க:
இந்த பழத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் இவை அனைத்தும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
மேலும் இதனை சாறாக செய்து குடிப்பதன் மூலம் தலையில் உள்ள பொடுகு மற்றும் முடி உதிர்வு பிரச்சனை நீங்கி தலை முடி நல்ல ஆரோக்கியம் பெரும்.
இதய ஆரோக்கியம்:
நோனி பழத்தில் பொட்டாசியம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் ஆகிய சத்துக்கள் அடங்கி உள்ளது. ஆகையால் இதனை நாம் எடுத்துக்கொள்வதன் மூலம் நம்முடைய உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அதுமட்டும் இல்லாமல் இந்த பழத்தில் ஸ்கோபோலட்டின், டம்னகாந்தல் என்ற சேர்மங்கள் உள்ளது. ஆகையால் இந்த பழத்தினை நாம் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயினை உண்டாக்கும் செல்களை அழித்து ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.
வெண்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |