பிசிஓடி அறிகுறிகள் – Pcos Meaning in Tamil Symptoms
ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி ஏதாவது உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம் தான். ஆனால் அப்படி அந்த பிரச்சனை வந்து அதன் பின்பு ஏதாவது சிகிச்சை செய்வதை விட அதற்கு முன்பு அதனை வராமல் தடுக்கலாம். நாம் பார்க்க போகும் நோய்க்கான அறிகுறியை பற்றி பார்க்கலாம். பொதுவாக நாம் அனைவருமே சிறு சிறு பருக்கள் வந்தால் கூட அது சரியாகும் வரை ஏதாவது அதற்கு சிகிச்சை அளித்துக்கொண்டு தான் இருப்போம். பெண்கள் அதிகமாக இந்த ஒரு நோயால் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அது என்ன இதற்கு என்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
Pcos Meaning in Tamil Symptoms:
பிசிஓடி என்றால் கருப்பைக்குள் இருக்கும் ஆண்ட்ரோஜன்கள் நீர்க்கட்டிகளை ஏற்படுத்துகிறது. கருப்பைகளுக்குள் பெரிதாகி, முட்டைகளைச் சுற்றி பல நுண் குமிழ்களை உருவாக்கி ஹார்மோன்கள் ஏற்ற இரக்கம் செய்கிறது. இது ஆண் ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்தி, ஆண்ட்ரோஜன்கள், இது கருப்பையில் நீர்க்கட்டிகள் என்று அழைக்கப்படும். இது பல நுண்கிருமிகள் கொண்டு நிரப்பட்டு இருக்கும். இதனால் தான் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அதனை வைத்து நமக்கு Pcos பிரச்சனை உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். அது என்ன அறிகுறி என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
முகத்தில் பருக்கள் வர காரணம்:
பருக்கள் வருவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் அளவுக்கு அதிகமான பருக்களும் அதேபோல் அதன் கூடவே கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் இதுபோன்ற Pcos பிரச்சனைகள் வரும். பருக்கள் வர காரணம் ஆன்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன்கள். இது சினைப்பையில் தான் உற்பத்தி ஆகிறது. இது முகத்தில் எண்ணெய் போன்ற பிசு பிசுப்புகளை ஏற்படுத்தும். பிரச்சனை உள்ள சிலருக்கு முகம், கழுத்து, முதுகு மற்றும் மார்பு பகுதியில் பருக்கள் வரும் முக்கியமாக Pcos உள்ளவர்களுக்கும் அதிகம் காணப்படும்.
அதேபோல் தலை முடி கொட்டும் இதற்கு காரணம் ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரப்பதாலே ஏற்படும். இதனால் தலை முடி வலுவிழந்து காணப்படும்.
பி.சி.ஓ.டி பிரச்சனையை தடுக்கும் உணவுகள்
உடலில் முடி வளர காரணம்:
அளவுக்கு அதிகமாக உடலில் முடி வளர்ந்தால் அதற்கு முக்கிய காரணம் Pcos ஆகும். பெண்களுக்கு உடலில் முடி வளர்வதை விட முகத்தில் முடி வளர்வதை பார்க்க தான் முகத்தில் அழகை கெடுப்பது போல் இருக்கும். அதேபோல் உடலில் முடி வருவதற்கு காரணம் முகம், மார்பு, வயிறு, முதுகு, கை மேல்பகுதி அல்லது கால் மேல்பகுதியில் அடர்த்தியான கருமை நிற முடி வளர்வதற்கு முக்கிய காரணம் ஆன்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் காரணம் ஆகும்.
இதனை தவிர மற்ற அறிகுறிகள் காரணம் அது ஒழுங்கற்ற மாதவிடாய், திடீர் எடை அதிகரிப்பு, தலை முடி கொட்டி மெலிந்து காணப்படுவது. இதுபோன்ற அறிகுறிகள் தான் Pcos அறிகுறிகள் ஆகும்.
Pcos Symptoms and Treatment in Tamil:
முதலில் உங்கள் உடல் எடையை குறைப்பது அளவுக்கு அதிகமாக எடை இருந்தால் 5 கிலோ முதல் 10 கிலோ வரை குறைக்கலாம். இது மாதவிடாய் சரியாக வருவதற்கு உதவி செய்யவும்.
- சரியான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல்.
- முக்கியமாக உடற்பயிற்சி
- சரியாக நேர்தத்திற்கு தூங்குவது
- மனதை எதையும் யோசிக்கலாம் இருப்பது.
- நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுதல்
- சர்க்கரை மற்றும் பால் உணவு பொருட்களை தவிர்த்தல்.
சினைப்பை நோய்கள் அர்த்தம் என்ன தெரியுமா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |