மாதுளை பழத்தின் ஜூஸில் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா..?

Advertisement

மாதுளம் பழம் ஜூஸ் குடித்தால் ஏற்படும் தீமைகள்

பொதுவாக நம் பதிவின் வாயிலாக தினம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் நாம் இன்று பார்க்கப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். சரி இப்போது நாம் வாழும் காலகட்டம் எப்படி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். அதாவது எங்கு பார்த்தாலும் வாகன புகைகளும், சுற்றுசூழல் மாசும், தொழிற்சாலை கழிவுகளும் தான் காணப்படுகிறது.

இப்படி பல நோய்களை உண்டாக்கும் காலகட்டத்தில் தான் வாழ்ந்து வருகின்றோம். அப்படி இருக்கையில் யாருக்கு என்ன நோய் வரும் என்றே சொல்ல முடியாது. இதன் காரணமாக நாம் சத்தான காய்கறிகளையும் பழங்களையும் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் அதனாலும் சில பாதிப்புகள் வரும் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா..? அதனால் தான் இன்று நாம் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

மாதுளை செடியில் காய்கள் அதிகம் காய்க்க இதை மட்டும் செய்யுங்க..

மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்: 

மாதுளை ஜூஸ்

பொதுவாக நம் அனைவருக்குமே மாதுளைப் பழத்தில் இருக்கும் சத்துக்கள் தெரியும். அதனால் தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் என்று அனைவரும் மாதுளை பழத்தை விரும்பி சாப்பிடுகிறார்கள். மேலும் பலருக்கும் மாதுளை பழத்தை உரித்து சாப்பிடுவதை விட, அதை ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதுபோல மாதுளை ஜூஸ் குடிப்பதால் பல நன்மைகள் இருக்கின்றன. அந்த நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..

சரி என்ன தான் மாதுளை ஜூஸில் அதிக நன்மைகள் இருந்தாலும் அதிலும் சில தீமைகள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? அதாவது எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அது சில பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை தான் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று பெரியவர்கள் கூறினார்கள்.

இதுபோல தான் மாதுளை பழமும். நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதை பற்றி இப்போது பார்ப்போம்.

இரத்த அழுத்தம்: அளவுக்கு அதிகமாக மாதுளை ஜூஸ் குடிப்பதால் இரத்த அழுத்த அளவுகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகிறது.

சருமத்தில் பாதிப்பு: மாதுளை ஜூஸ் நாம் அதிகமாக எடுத்து கொள்ளும் போது, அது சரும பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதாவது சருமத்தில் அரிப்பு, அலர்ஜி, சிவத்தல், தடிப்பு போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.

தூக்கி எறியும் மாதுளை தோலில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா.!

சளி பிடித்தல்: சிலருக்கு மாதுளை ஜூஸ் குடித்த பின் உடலில் அலர்ஜியை ஏற்படுத்துகிறது. அதாவது சளி பிடித்தது போன்ற உணர்வு, தொண்டை வறட்சி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

வயிற்று வலி: மாதுளை ஜூஸ் குடிக்கும் சிலருக்கு குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, அரிப்பு, வீக்கம், தொண்டையில் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகள்: பொதுவாக மாதுளம்பழம் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இருந்தாலும் நாம் அதை அதிகமாக குடிக்கும் போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள், மாதுளை ஜூஸ் அதிகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள்: பொதுவாக மாதுளை ஜூஸ் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக நன்மைகளை தருகிறது. ஆனாலும் நாம் அதிகமாக குடிக்கும் போது இதனால் உடலிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement