வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

என்ன சொல்றீங்க இந்த உணவு பொருட்கள் எல்லாம் Slow Poison-னா..? இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காமலே சாப்பிட்டுக்கிட்டு இருத்துருக்கோமே..!

Updated On: November 14, 2023 12:41 PM
Follow Us:
Slow Poison Foods in Tamil
---Advertisement---
Advertisement

Slow Poison Foods in Tamil

இந்த உலகில் எத்தனையோ ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. அப்படி நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்ற உணவுகள் அனைத்தும் எப்பொழுதும் நமக்கு நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்று நினைத்தால் அது தவறு. ஏனென்றால் ஆரோக்கியத்தை அளிக்கின்ற உணவுகள் சில நேரங்களில் தீமையை கூட விளைவிக்கும். அதிலும் குறிப்பாக உயிர் போகும் அளவிலான தீமையை கூட இந்த உணவுகள் விளைவிக்க கூடும். எப்படியென்றால் நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் நமது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கெமிக்கல்கள் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தான் இன்றைய பதிவில் நமது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் சில உணவு பொருட்களை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

திராட்சை பழ ஜூஸினை அதிகம் குடிப்பவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

Natural Slow Poison Foods in Tamil:

நமது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் சில உணவு பொருட்களை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். அவை என்னென்ன உணவுகள் என்று முழுதாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு:

Natural Slow Poison Foods in Tamil

நம்மில் பலருக்கும் பிடித்த உணவான உருளைக்கிழங்கு நமது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆம் நண்பர்களே உருளைக்கிழங்கின் விஷமானது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும்.

மேலும் உருளைக்கிழங்கு பச்சை நிறத்தில் இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருக்கும். இந்த விஷமானது உடலில் உள்ள சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கோமா வரை கொண்டு செல்வதோடு, சில நேரங்களில் திடீரென்று இறப்பிற்கு வழிவகுக்கும்.

தக்காளி:

Natural Slow Poison Foods Tamil

அடுத்து நாம் ஆரோக்கியமான உணவு என்று நினைத்து கொண்டிருக்கும் ஒரு உணவு தான் தக்காளி. இதிலேயும் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருகின்றது.

அதே போல் இந்த விஷமானது இதனுடைய தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும். நீங்கள் இதனுடைய தண்டு மற்றும் இலைகளை சாப்பிட்டால் அது நரம்புதளர்ச்சியை உருவாக்குவதோடு, வயிற்று உப்புசத்தை அதிகரித்து இறுதியில் இறப்பை ஏற்படுத்திவிடும்.

ஆப்பிள்:

Which food is slow poison in tamil

என்ன நண்பர்களே அதிர்ச்சியாக உள்ளதா ? தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் நாம் சாப்பிடும் ஆப்பிளின் விதையை சேர்த்து சாப்பிட்டால் நமது வாழ்நாளின் எண்ணிக்கை தான் குறையும்.

ஆம் நண்பர்களே ஆப்பிளின் விதையில் சயனைடு என்னும் ஆபத்தான விஷம் உள்ளது.

மக்கானாவை உணவில் அதிக அளவு சேர்த்து கொள்கிறீர்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

செர்ரி:

Natural slow poison foods list in tamil

பொதுவாக பெரும்பாலான மருத்துவர்கள் செர்ரி பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த பழங்ளை சாப்பிடுவதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் செர்ரிப் பழங்களில் இலை மற்றும் விதைகளில் தான் அதிக அளவு விஷம் உள்ளது. அதனால் இந்த செர்ரிப் பழங்களில் இலை மற்றும் விதைகளை மறந்தும் சாப்பிட்டு விடாதீர்கள்.

ருபார்ப்:

Natural slow poison foods list tamil

இந்த ருபார்ப் என்பது ஒரு இயற்கையாக வளரக்கூடிய மூலிகை செடியாகும். ஆனால் இந்த மூலிகை இயற்கையாகவே அதிகப்படியான விஷத்தைக் கொண்டு இருக்கும். பொதுவாக இதன் வேரை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

ஆனால் இந்த மூலிகையின் இலைகளை சாப்பிட்டால், உடனே உயிர் போய்விடும் என்று கூறப்படுகிறது.

இந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். மேலும் குறிப்பாக இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தான், ஆபத்தை விளைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now