Suvarotti Benefits in Tamil
அசைவ உணவுகளில் அனைவர்க்கும் அதிகமாக விரும்புவது மட்டன் தான். சொல்லப்போனால், அசைவ பிரியர்களின் சாப்பாட்டில் முதலிடத்தை பிடிப்பது மட்டன் தான். மட்டனில் செய்யப்பட்ட குழம்பு, கிரேவி, மட்டன் சூப், ஆட்டுக்கால் சூப், இரத்த பொரியல் மற்றும் குடல் குழம்பு இப்படி மட்டனில் பல உணவு வகைகளை அடிக்கிக்கொண்டே போகலாம். மட்டனில் நம் உடலுக்கு தேவையான புரோட்டீன், கலோரிகள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், நம் உடலுக்கு ஒரு புதுவிதமான ஆற்றலையும் தருகிறது. இதனால் தான் காய்ச்சல் உள்ளிட்ட ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட்ட பிறகு நோயுற்றவர்களுக்கு மட்டன் மிளகு சூப் செய்து தருவார்கள். எனவே, அந்த வகையில் மட்டனில் இருக்கக்கூடிய சுவரொட்டி பற்றிய சில விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆட்டு உறுப்பில் இருக்கக்கூடிய சுவரொட்டி பற்றி தெரியாது. ஆட்டு உறுப்பில் ஒன்றான மண்ணீரல் தான் சுவரொட்டி என்று அழைக்கப்படுகிறது. எனவே, இதனை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.? என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஆட்டு சுவரொட்டி என்றால் என்ன.?
ஆட்டின் மண்ணீரல் உறுப்பு “சுவரொட்டி” என்று அழைக்கப்படுகிறது. இதனை சுட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிடுவதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம். இதில் நம் உடலுக்கு தேவையான பெரும்பாலான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. முக்கியமாக, நம் உடலின் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அதாவது, அமினோ அமிலங்கள், பி12 மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளது.
மட்டன் சுவரொட்டியை இப்படி செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்
ஆட்டு சுவரொட்டி நன்மைகள்:
இரத்த சோகை நீங்க:
ஆட்டு சுவரொட்டியை வாரத்திற்கு ஒரு முறை நாம் உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் இரத்த சோகை நீங்கும். அதாவது, இது, ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகை வராமல் தடுக்கிறது. எனவே, இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கல் வாரம் ஒருமுறை இதனை உணவில் எடுத்து கொண்டால் இரத்தசோகை நீங்கும்.
மாதவிடாய் பிரச்சனை தீர்வு:
சுவரொட்டி, ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும். அதுமட்டுமில்லாமல், மகப்பேறு காலத்தில் இரத்தசோகை நோயால் பாதிக்கப்படும் பெண்கள் வாரம் ஒருமுறை சுவரொட்டி சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் இரத்தசோகை நீங்கி அதிக இரும்புசத்து கிடைக்கும்.
சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு:
சிறுநீரகம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சுவரொட்டி ஒரு நல்ல தீர்வாக அமையும். எனவே, சிறுநீரக நோய் உள்ளவர்கள் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சுவரொட்டியை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் சிறுநீரக பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
சுவரொட்டியில் உள்ள அமினோ அமிலங்கள், பி12 மற்றும் தாதுக்கள் உடலை தீங்கு விளைவிக்கும் நோய்களில் இருந்து பாதுகாப்பாக வைத்து கொள்கிறது. சுவரொட்டியை தொடர்ந்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இரும்பு சத்து அதிகரிக்க:
உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் சுவரொட்டியை வாரம் ஒருமுறை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் இரும்பு சக்தியை அதிகரிக்கலாம். மேலும், முடக்குவாதம் பிரச்சனை இருப்பவர்கள் சுவரொட்டியை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.
புளுபெர்ரி பழத்தை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |