Blueberry Fruit Benefits in Tamil
இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனமகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும். பொதுவாக நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. அதனால் இன்றைய சூழலில் அனைவருமே தங்களின் உணவில் கண்டிப்பாக ஆரோக்கியமானவற்றை தான் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் கொண்டுள்ளார்கள். அதனால் அனைவருமே தங்களின் உணவினை பார்த்து பார்த்து தேர்வு செய்து சாப்பிடுகிறார்கள்.
அப்படி நாம் ஆரோக்கியமான உணவுகள் என்ற பட்டியலை பார்க்கும் பொழுது கண்டிப்பாக அதில் பழங்கள் இடப்பெற்றிருக்கும். ஆம் நண்பர்களே பழங்களில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பது நமக்கு தெரியும். ஆனால் எந்தெந்த பழங்களில் எந்த மாதிரியான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பது நமக்கு தெரியாது. அதனால் தான் இன்றைய பதிவில் புளுபெர்ரி பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளை பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க..
புளுபெர்ரி பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
ஒரு கப் புளுபெர்ரி பழத்தில், சுமார் 84 கலோரிகள் (148 கிராம்) உள்ளது. அதேபோல் வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற பல அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
புளுபெர்ரி நன்மைகள்:
இப்பொழுது நாம் புளுபெர்ரி பழத்தினை தொடர்ந்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு காணலாம்.
பேஷன் பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க
1. இதய ஆரோக்யத்தை மேம்படுத்த:
இந்த புளுபெர்ரி பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து, பொட்டசியம், ஃபோலேட், வைட்டமின்கள், சைடோ ஊட்டச்சத்துகள் இரத்தத்தில் கலந்திருக்கும் கெட்ட கொழுப்புகளைநீக்க உதவுகிறது.
இதன் மூலம் நமது இதயத்தின் செயல்பாடு சீராக உள்ளது. எனவே பலவகையான இதய நோய்கள் தடுக்கப்படுகிறது.
2. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
தினமும் நாள்தோறும் ஒரு ப்ளூபெர்ரி சாப்பிட்டு வந்தால் பார்த்திறனாது மேம்படுகிறது. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சிக்கு எதிரான பண்பு மற்றும் கொலாஜன்களை-நிலைப்படுத்தும் பண்புகள் பார்வைத்திறனை மேம்படுத்த உதவுகிறது.
தினமும் 4 பிஸ்தா சாப்பிடுவதால் இப்படியெல்லாம் கூட நடக்குமா
3. மூளை செயல்பாட்டை சீராக்குகிறது:
இந்த புளுபெர்ரி பழமானது மூளையின் செயல்பாட்டை சீராக்கும் திறனை கொண்டுள்ளதன் காரணமாக பெரும்பாலும் இதனை “மூளை பெர்ரி” என்றும் அழைக்கப்படுகிறது.
இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மூளையை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
4. புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது:
இந்த புளுபெர்ரி பழத்தில் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் பல கலவைகள் உள்ளன. இந்த கலவைகளில் ஒன்று எலாஜிக் அமிலம் ஆகும். இது புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இதன் மூலம் நமக்கு புற்றுநோய் வரும் வாய்ப்புகள் குறைகிறது.
பாதாமில் அதிக நன்மை உள்ளதுனு நமக்கு தெரியும் ஆனால் பாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா
5. செரிமானத்தை மேம்படுத்துகிறது:
இது ஒரு சிறந்த நார்சத்துக்கான மூலமாக உள்ளது. இந்த நார்ச்சத்து தான் நமது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் நமக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.
6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
புளுபெர்ரியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஆரோக்யமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு அவசியம். வைட்டமின் ‘சி’ வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்குப் பயனாகிறது.
இதை தெரிஞ்சிக்காம மட்டும் கம்பினை சாப்பிடாவே சாப்பிடாதீங்க
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |