பாதாமில் அதிக நன்மை உள்ளதுனு நமக்கு தெரியும்.. ஆனால் பாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?

Advertisement

Badam Pisin Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவில் ஒரு பயனுள்ள தகவலை  அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதாவது பொதுவாக நாம் பயன்படுத்து அனைத்து உணவு பொருட்களையும் பற்றி நமக்கு முழுமையாக தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதிலும் இல்லை என்றே இருக்கும். அதாவது நாம் பயன்படுத்தும் பலவகையான உணவுகளில் சிலவற்றை சாப்பிடுவதால் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்று நமக்கு தெளிவாக தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை நாம் சாப்பிடுவதால் நமக்கு என்ன பயன் கிடைக்கின்றது என்பதே நமக்கு தெரியாது. அப்படிப்பட்ட ஒரு உணவு தான் பாதாம் பிசின் நாம் அனைவருமே இந்த பாதாம் பிசினை பலவகையில் சாப்பிட்டிருப்போம் ஆனால் இதனை சாப்பிடுவதால் நமக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதை பற்றி நமக்கு முழுமையாக தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் பாதாம் பிசினின் நன்மைகளை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதை தெரிஞ்சிக்காம மட்டும் கம்பினை சாப்பிடாவே சாப்பிடாதீங்க

பாதாம் பிசின் என்றால் என்ன..?

Badam pisin nanmaigal in tamil

ஒரு பாதாம் மரம் பாதாம் பிசின் என்றழைக்கப்படும் பசையை உற்பத்தி செய்கிறது, இது பல நூற்றாண்டுகளாக வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பாதாம் பிசின் வரலாறு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. அப்பொழுதெல்லாம் காய்ச்சல், சளி போன்றவற்றுக்கு இது மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.

மேலும் அன்றைய காலகட்டத்தில் இரவு உணவுக்குப் பிறகு படுக்கைக்குச் செல்வதற்கு முன் சாப்பிடுவார்கள்.

பாதாம் பிசின் நன்மைகள்:

இந்த பாதாம் பிசினை நாம் பயன்படுத்துவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க

இதைமட்டும் தெரிஞ்சிக்கிட்டீங்கனா மாதுளை பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க மாட்டிங்க

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

Badam pisin payangal in tamil

பொதுவாக பாதாம் பிசின் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் அதிக அளவு உள்ள வைட்டமின் ஈ ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.

ஃப்ரீ ரேடிக்கல்கள் என்பது உங்கள் உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

ஆரோக்கியமான பளபளப்பு:

Badam Pisin Health Benefits in Tamil

பாதாம் பிசினில் உள்ள ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்கிறது. மேலும் இதனை தொடர்ந்து சரியான அளவில் உட்கொள்வதால் உங்கள் சருமத்திற்கு வயது எதிர்ப்பு பண்புகளையும் வழங்குகின்றன.

சேப்பக்கிழங்கினை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வீர்களா அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

முடி உதிர்வைத் தடுக்க:

Badam Pisin Beauty Benefits in Tamil

மன அழுத்தம், மோசமான ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் முதுமை போன்றவற்றால் ஏற்படும் முடி உதிர்விலிருந்து பாதாம் பிசின் பாதுகாக்கிறது.

மேலும் பாதாம் பிசின் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும், இது தலைமுடியின் வேர்களில் இருந்து புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இதயத்திற்கு நல்லது:

Almond gum benefits in tamil

பாதாம் பிசின் நமது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதாவது பாதாம் பிசின் நமது உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ரால்களை குறைகிறது. அதேபோல் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது.

இது நமது உடலில் கெட்ட எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது. மேலும் நல்ல எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும்.

புத்திசாலி ஆக்குகிறது:

Almond gum Health benefits in tamil

பாதாம் பிசின் உங்களின் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதால் உங்களை புத்திசாலியாக்குகிறது. மேலும் இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் உங்களின் நினைவாற்றல் மற்றும் செறிவை மேம்படுத்த உதவுகிறது.

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement