வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இதைமட்டும் தெரிஞ்சிக்கிட்டீங்கனா.. மாதுளை பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க மாட்டிங்க..!

Updated On: June 30, 2023 11:24 AM
Follow Us:
Pomegranate Benefits in Tamil
---Advertisement---
Advertisement

Pomegranate Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி கிடைக்கும். நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் உணவுகளில் பல உணவுகள் நமக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கும். ஆனால் அப்படிப்பட்ட உணவுகளை நாம் உட்கொள்ளுவதால் நமக்கு எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. எனவே தான் நமது பதிவின் வாயிலாக நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளினால் நமக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளை பற்றியும் அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் நம்மில் பலருக்கும் மிகவும் விருப்பமான பழமான மாதுளை பழத்தின் நன்மைகளை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

சேப்பக்கிழங்கினை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வீர்களா அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

Pomegranate health benefits in tamil

மாதுளையில் நீர், ஆற்றல், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்சத்து, சர்க்கரை ஆகியவை உள்ளன. வைட்டமின் சி, வைட்டமின் பி 6, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

மாதுளையின் பயன்கள்:

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே மிகவும் விருப்பமான பழங்களில் இந்த மாதுளை பழமும் ஒன்று ஆகும். ஆனால் ஒருசிலருக்கு இந்த பழம் என்றால் அவ்வளவாக பிடிக்காது.

அப்படிப்பட்டவர்கள் அனைவரும் இந்த பதிவை முழுதாக படித்தீர்கள் என்றால் நீங்கள் மாதுளை பழத்தை வெறுக்கவே மாட்டீர்கள்.

ஹேசல் கொட்டையை சாப்பிடுவதற்கு முன்னால் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

எலும்புகளை வலுப்படுத்த:

எலும்புகள் வலிமை பெற

எலும்பு வலி மற்றும் மூட்டு வலி போன்றவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் மாதுளை பலத்தை தினமும் சாப்பிடுங்கள். ஏனென்றால் இதில் அதிக அளவில் இரும்பு மற்றும் கால்சியம் உள்ளது. இவை நமது எழுப்புகளுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுத்த:

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

பொதுவாக மாதுளையில் ஒரு நல்ல அளவில் ஆன்டிபயோடிக் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் இருக்கின்றன, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க உதவுகிறது.

நோனி பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா

கர்ப்ப காலத்தில் மாதுளையின் நன்மைகள்:

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

அதாவது கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவருவதால் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர உதவிபுரியும். அதேபோல் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

முடிவளர்ச்சிக்கு மாதுளை:

முடி வளர்ச்சியை அதிகரிக்க

பொதுவாக மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் அதிக அளவு கொண்டுள்ளது. இது உச்சந்தலையில் உள்ள இரத்த அழுத்தத்தை சமப்படுத்துகிறது. இதனால் சிக்கலான, பலவீனமான, உயிரற்ற முடியையும் வலுப்படுத்த உதவுகிறது.

மேலும் மாதுளை உங்களின் தலைமுடியை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்ற உதவுகிறது.

குதிரை மசாலை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காமலே இருந்திருக்கோமே

சிறுநீரக பிரச்சனைகளை போக்க:

சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு

மாதுளையில் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஆன்ட்டி அழற்சி பண்புகள் உள்ளன, அவை உடலை வலிமையாக்குகின்றன. மாதுளையை சரியான அளவில் உட்கொள்வதன் மூலம் சிறுநீரக பிரச்சினையிலிருந்து சிறந்த நிவாரணம் கிடைக்கிறது.

உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now