Hazelnut Benefits in Tamil | Hazelnut Uses in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது அது உங்களுக்கே புரியும். அதாவது இன்றைய சூழலில் அனைவருமே மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தங்களின் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதனால் அனைவருமே மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தங்களின் சாப்பாட்டில் சேர்த்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அதே போல் தான் இன்றைய சூழலில் நம்மில் பலரும் இந்த ஹேசல் கொட்டையில் உள்ள அனைத்து சத்துக்களையும் பற்றி அறிந்து கொண்டு அதனை தமது உணவுப்பட்டியலில் சேர்த்து கொள்ள ஆரம்பித்து விட்டோம். அப்படி நாம் உணவில் சேர்த்து கொள்ளும் ஹேசல் கொட்டையினால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னனென்ன நன்மைகள் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
Hazelnut in Tamil Benefits:
ஹேசல் கொட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் ஹேசல் கொட்டையில்
- 628 மி.கி கலோரிகள்
- 61 கிராம் கொழுப்பு
- 15 கிராம் புரதம்
- 17 கிராம் மாவு சத்து
- 4.3 கிராம் சர்க்கரை
- 9.7 கிராம் உணவு நார் சத்து
- 20 மி.கி வைட்டமின் ஏ
- 6.3 மி.கி வைட்டமின் சி
- 15.03 கிராம் வைட்டமின் இ
- 14.2 மைக்ரோ கிராம் வைட்டமின் கே
- 4.70 மி.கி இரும்புச் சத்து
- 114.00 மி.கி கால்சியம்
- 680 மி.கி பொட்டாசியம்
- 0.563 மி.கி வைட்டமின் பி6
- 113 மைக்ரோ கிராம் ஃபோலேட்
- 290 மி.கி பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஹேசல் கொட்டையின் நன்மைகள்:
இதய ஆரோக்கியம்:
இந்த ஹேசல் கொட்டையில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய நோய்களை தடுக்க உதவுகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஹேசல் கொட்டையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் உயர் இரத்த அழுத்தத்தை குறைகின்றது. மேலும் இதில் உள்ள பினோலிக் கலவைகள் இதயத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் வீக்கத்தைக் குறைக்க பயன்படுகின்றது.
உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
புற்றுநோயை தடுக்க:
உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் சில வகையான புற்றுநோயை உருவாக்கும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த ஹேசல் கொட்டையில் உள்ள மாங்கனீசு சூப்பர் ஆக்சைடு டிஸ்முடேஸ் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட் என்சைம்களில் ஒன்று ஆகும்.
எனவே இவை உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்களை குறைத்து புற்றுநோய் வருவதை தடுக்க உதவுகின்றது. மேலும் ஹேசல் கொட்டையில் உள்ள வைட்டமின் ஈ புற்றுநோய்க்கு வழிவகுக்கும் செல்லுலார் சேதத்திலிருந்து உடலில் உள்ள செல்களைப் பாதுகாக்க உதவுகின்றது.
சர்க்கரை நோயை தடுக்க:
ஹேசல் கொட்டையில் உள்ள ஒலிக் அமிலம் ஒரு முக்கிய கொழுப்பு அமிலமாகும். இன்சுலின் உணர்திறனை சீராக்கி இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன.
இதனால் சர்க்கரை நோய் வருவது தடுக்கப்படுகிறது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நோய் குறைய உதவுகின்றது.
தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
உடல் எடை குறைய:
இதில் சரியான அளவு உள்ள கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நமது பசி உணர்வை தடுக்க உதவுகின்றது. அதனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இதனை பயனபடுத்தலாம்.
எலும்புகளின் ஆரோக்கியம்:
பொதுவாக எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மெக்னீசியம் பயன்படுகின்றது. இந்த மெக்னீசியம் ஹேசல் கொட்டையில் அதிக அளவு உள்ளதால் இவற்றை சாப்பிடுவதால் புதிய எலும்புகள் வளர்வதற்கும் பழைய எலும்புகளை பலப்படுத்தவும் உதவுகின்றது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |