குதிரை மசாலை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

Advertisement

Alfalfa Benefits in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது அது உங்களுக்கே புரியும். அதாவது இன்றைய சூழலில் அனைவருமே மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தங்களின் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதனால் அனைவருமே மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தங்களின் சாப்பாட்டில் சேர்த்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

அதே போல் தான் இன்றைய சூழலில் நம்மில் பலரும் இந்த குதிரை மசாலில் உள்ள அனைத்து சத்துக்களையும் பற்றி அறிந்து கொண்டு அதனை உணவில் சேர்த்து கொள்ள ஆரம்பித்து விட்டோம். அப்படி நாம் உணவில் சேர்த்து கொள்ளும் குதிரை மசாலினால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

குதிரை மசால் பற்றிய சில குறிப்புகள்

குதிரை மசால் ஊட்டச்சத்துக்கள்:

Alfalfa malt benefits

100 கிராம் குதிரை மசாலில்

  • 23 கிராம் கலோரி
  • 2.1 கிராம் கார்போஹைட்ரேட்
  • 4 கிராம் புரதம் 
  • 0.7 கிராம் கொழுப்பு 
  • 1.9 கிராம் ஃபைபர் (Fiber)
  • 92.8 கிராம் நீர்ச்சத்து 
  • 32 மி.கி கால்சியம்
  • 27 மி.கி மக்னீசியம் 
  • 79 மி.கி பொட்டாசியம் 
  • 70 மி.கி பாஸ்பரஸ் 
  • 8.2 மி.கி வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

குதிரை மசால் நன்மைகள்:

Alfalfa malt benefits in tamil

கொலஸ்ட்ராலை குறைக்க:

Alfalfa Health Benefits in Tamil

இந்த குதிரை மசாலில் சபோனின்கள் எனப்படும் தாவர அடிப்படையிலான கலவைகள் அதிக அளவு நிறைந்துள்ளன. இந்த கலவைகளை நமது உடலில் உள்ள தேவையற்றை கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி புரிகின்றது.

அதாவது குரங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் குதிரை மசாலில் உள்ள சபோனின்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் சதவீதத்தை 3% குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த:

Alfalfa Health Benefits

இந்த குதிரை மசாலில் இயற்கையாகவே இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. இதனால் உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.

இதனை கெய்ரோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், குதிரை மசால் முளைகள் நீரிழிவு விலங்குகளில் அதிக குளுக்கோஸ் அளவை குறைப்பதாகக் கண்டறியப்பட்டது. அதாவது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சிறுநீரக பிரச்சனைகளை போக்க:

Alfalfa Uses in Tamil

பொதுவாக குதிரை மசாலில் உள்ள டையூரிடிக் பண்புகள் சிறுநீரக கற்களை போக்கவும், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்டேட் தொடர்பான பிரச்சினைகளை போக்கவும் உதவி புரிகின்றது.

தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா

கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க:

Kuthirai masal payangal

குதிரை மசாலின் சாறுகள் சேதமடைந்த கல்லீரலை மறுகட்டமைப்பு செய்வதற்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கல்லீரல் நொதிகளை இரத்தத்தில் வெளியிடுவது கல்லீரல் சேதத்திற்கு ஒரு காரணமாக இருக்கின்றது.

இதனை குறைப்பதற்கு குதிரை மசாலின் சாறு உதவுகின்றது.

உடல் எடை குறைக்க:

Kuthirai masal nanmaigal

பொதுவாக குதிரை மசால் முளைகளில் உள்ள நார்ச்சத்து எடை இழப்பிற்கு மிகவும் உதவுகின்றது. அதாவது வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சரியான ஓய்வு ஆகியவற்றுடன் இணைந்து இந்த குதிரை மசால் முளைகளையும் சேர்த்து கொண்டீர்கள் என்றால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முடியும்.

என்ன சொல்றீங்க இந்த உணவு பொருட்கள் எல்லாம் Slow Poison-னா இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காமலே சாப்பிட்டுக்கிட்டு இருத்துருக்கோமே

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil

 

Advertisement