சேப்பக்கிழங்கினை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வீர்களா..? அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி..?

Advertisement

Colocasia Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி கிடைக்கும். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நமக்கு நன்மை அளிக்கும் உணவுகள் இருக்கும். ஆனால் அப்படி உள்ள உணவுகளை நாம் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது நமக்கு முழுமையாக தெரிந்திருக்காது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளினால் நமக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளை பற்றியும் அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றும் நாம் அனைவரும் நமது உணவில் அதிக அளவு சேர்த்து கொள்ளும் சேப்பக்கிழங்கினை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பலவகையான நன்மைகளை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னென்ன நன்மைகள் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

ஹேசல் கொட்டையை சாப்பிடுவதற்கு முன்னால் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

சேப்பங்கிழங்கு ஊட்டச்சத்துக்கள்:

Colocasia Health Benefits in Tamil

சேப்பக்கிழங்கில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, C, E, வைட்டமின் B6 மற்றும் போலேட் என்னும் Vitamin B-9 அதிக அளவில் உள்ளது. அதேபோல் இதில் மெக்னீசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தனிமங்களும் சரியான அளவில் நிறைந்துள்ளது.

சேப்பங்கிழங்கு பயன்கள்:

சேப்பக்கிழங்கு மட்டுமில்லாமல் அதனை இலை, தண்டு என அனைத்திலும் நமது உடல்நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் ஒரு சிலர் இதனை சாப்பிட மறுப்பார்கள்.

அப்படிபட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஏனென்றால் இதில் உள்ள நன்மைகளை பற்றி அறிந்து கொண்டால் அதன் பிறகு அவர்கள் எல்லோரும் சேப்பக்கிழங்கினை சாப்பிட மறுக்கவே மாட்டார்கள்.

சேப்பக்கிழங்கினை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை விரிவாக காணலாம் வாங்க.

நோனி பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா

இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் அபாயம் குறையும்:

Seppankilangu benefits in tamil

பொதுவாக சேப்பங்கிழங்கில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் E, C ஆகியவை சரியான அளவில் நிறைந்துள்ளதால் இதனை தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சேர்த்து கொண்டால் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்கள் வரமால் தடுக்கும்.

இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த:

Seppankilangu Health benefits in tamil

சேப்பங்கிழங்கில் அதிக அளவு மாவு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இரண்டு வகையான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள மிகவும் பயன்படுகிறது. இதனால் நீரிழிவு நோயிலிருந்து உங்களை காப்பாற்றுகிறது.

குதிரை மசாலை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காமலே இருந்திருக்கோமே

எடை குறைய:

Seppankizhangu benefits in tamil

சேப்பக்கிழங்கினை சாப்பிடுவதால் உங்களுக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். அதனால் நீங்கள் அதிக அளவு கலோரிகளை உட்கொள்வதை தவிர்க்கிறது. மேலும் இதில் அதிக அளவு கலோரிகள் இல்லை என்பதாலும் உடல் எடை குறைக்க நினைக்கும் நண்பர்களை இதனை உங்களின் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

செரிமான பிரச்சனை நீங்கும்:

Seppankizhangu health benefits in tamil

பொதுவாக இந்த சேப்பக்கிழங்கில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. அதனால் இதனை உங்களின் உணவில் சரியான அளவில் எடுத்து கொண்டால் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்களுக்கு உள்ள அனைத்து செரிமான பிரச்சனைகளை நீக்கிவிடும். மேலும் வாயு பிரச்சனை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளையும் போக்க உதவும்.

உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா

கண் ஆரோக்கியத்திற்கு:

Seppankilangu payangal in tamil

சேப்பக்கிழங்கில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்களின் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நல்ல பலனை அளிக்கின்றது. இதனால் உங்களின் கண்களின் ஆரோக்கியம் நன்கு மேப்படுகிறது.

தசைகள் வலுப்பெற:

Seppankizhangu payangal in tamil

சேப்பக்கிழங்கில் உள்ள மெக்னீசியம் தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த மிகவும் உதவும். அதனால் இதனை உங்களின் உணவில் தினமும் சேர்த்து கொள்வதின் மூலம் உங்களின் தசைகள் மற்றும் எலும்புகள் மிகவும் வலுப்பெறும்.

தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement