CAA Act in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவின் வாயிலாக குடியுரிமை திருத்தச் சட்டம் என்றா என்ன.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. இவ்வுலகில் பல சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி, அமல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் CAA என்று கூறப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பதை நீங்கள் சமீபத்தில் அதிகமாக கேட்டிருக்கலாம். ஆனால், அச்சட்டம் பற்றிய விவரங்கள் பற்றி நமக்கு தெரியாது. ஆகையால் நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act) பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன.?
பொதுவாக, வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவில் குடியேறியவர்கள் இந்திய குடிமகனாக ஆக முடியாது. இவ்வாறு குடியேறிவர்கள் ஒரு காலத்தில் நாட்டில் இருந்து வெளியேற்றபடுவார்கள். ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்கிறது. அதனை பற்றி பின்வருமாறு விவரமாக பார்க்கலாம்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act )1955 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய மதச்சிறுபான்மையோரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த இஸ்லாமியர்களுக்கு மட்டும் இச்சட்டம் தரப்படவில்லை. அதாவது, அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வரும் இஸ்லாமியர்கள் இந்திய குடியுரிமை பெற முடியாது.
போதைப்பொருள் தடுப்புச் சட்டம் என்றால் என்ன?
மக்களவையில், இச்சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், இச்சட்டத்திற்கு எதிராக 80 உறுப்பினர்களுக்கு வாக்களித்துள்ளார்கள். இச்சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், இச்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. அதேபோல், 2019 ஆம் ஆண்டில், டிசம்பர் 10 ஆம் தேதி மாநிலங்களவையில் இச்சட்ட திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது இச்சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளார்கள். இதனால் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமில்லாமல், 2019 ஆம் ஆண்டில் டிசம்பர் 12 ஆம் தேதி அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததால், சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
முன்பு 1955-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கொண்டு வரப்படும் குடியுரிமைத் திருத்த சட்டத்தில், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லையென்றாலும், இந்தியாவில் குறைந்தது 5 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.இச்சட்டத்தை விமர்சிப்பவர்கள் சொல்வது என்ன.?
இந்தியாவின் அண்டை நாடுகள் மொத்தம் 8. இதில், மூன்று நாடுகளில் இருந்து அதாவது, ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் 2014 ஆம் ஆண்டிற்கு முன்னதாக இந்தியாவிற்கு வந்திருந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால், இச்சட்டத்தை விமர்சிப்பவர்கள், இந்தியாவிற்கு மொத்தம் 8 அண்டை நாடுகள் இருப்பினும், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் என இந்த மூன்று நாடுகளை மட்டும் தேர்வு செய்தது ஏன்.? என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலும் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகள். இதனால், இந்த மூன்று நாடுகளில் இருந்தும் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவிற்கு வரும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது என்பது தவறான ஒன்று என்று பலபேர் இச்சட்டத்தை விமர்சித்து வருகிறார்கள். ஏனென்றால், மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவிற்கு வந்தவர்களில் இஸ்லாமியர்கள் உள்ளார்கள். ஆனால், இஸ்லாமியர்களுக்கு மட்டும் குடிரியுரிமை வழங்கப்படாது ஏன்.? என பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன.?
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |