Driving License Rules in Tamil
இந்திய மோட்டார் வாகன சட்டங்கள் நிறைய இருக்கின்றன, ஒவ்வொரு சட்ட மீறலுக்கும் ஒவ்வொரு தண்டனை உள்ளது. பெரும்பாலனோர் இது போன்ற வாகனசட்டங்களை மதிப்பதில்லை, இதனால் நிறைய சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றது. அனைவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடந்தாலே இவ்வாறு விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஒவ்வொரு மோட்டார் வாகன சட்டங்களை மீறுபவரை குற்றவாளிகள் என்றே கூறலாம். இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது license இல்லாமல் வண்டி ஓட்டினால் என்ன நடக்கும் மற்றும் Driving License புதிய ரூல்ஸ் பற்றி தான் தெளிவாக பார்க்கப்போகின்றோம்.
வண்டி ஓட்டும் அனைவர்க்கும் Driving License என்பது கட்டாயமாகும். இந்தாண்டு இந்திய அரசு தற்போது ஓட்டுநர் உரிமம் தொடர்பான விதிமுறைகளை மாற்றியுள்ளது. என்னதான் தன்னுடைய விதிமுறைகளை மாற்றினாலும், வாகன ஓட்டுனர்கள் கண்டிப்பாக Driving License வைத்திருப்பது என்பது அவசியமாகும்.
Without Driving License Rules in Tamil
பிரிவு 3 அல்லது பிரிவு 4 ஐ மீறி அதாவது Driving License இல்லாமல் மோட்டார் வாகனத்தை இயக்கும் எந்தவொரு நபரும் மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்த விதிமுறையானது அனைவர்க்கும் பொருந்தும், எனவே அனைவரும் License இல்லாமல் வண்டி மிக எளிதாக ஓட்டலாம் என்று நினைத்து கொள்ளாதீர்கள்.
இனி வண்டியில Overload ஏத்தினா 60,000 வர அபாரதமா!
New Driving Rules in Tamil
ஏப்ரல் 1, 2024 முதல், பொதுச் சாலைகளில் 15 ஆண்டுகளுக்கு மேல் பழைய கார்கள் இயங்க அனுமதிக்கப்படாது. 15 வயதுக்கு மேற்பட்ட பழைய வாகனங்கள் இனி பதிவு செய்யப்படாது என்று அது சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு புதிய விதிமுறைகளும் நடைமுறைக்கு வரும்.
- யாரொருவர் Driving License rules-ஐ மீறுகிறாரோ அவர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
- சாலையில் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும்.
- சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறி minor வாகனம் ஓட்டினால் அவருக்கு 25,000 அபராதம் மட்டுமின்றி 25 வயது வரை உரிமம் பெற தகுதியற்றவராக கருதப்படுவர்.
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |