Indian Motor Vehicles Act Section 113/194(1)
இந்திய மோட்டார் வாகன சட்டங்கள் நிறைய உள்ளன, வாகனத்திற்கு ஏற்றவாறு சில சட்டங்கள் மாறுபடலாம், இருப்பினும் சட்டம் என்பது அனைவர்க்கும் பொதுவானது. இந்த சட்டங்களை மதித்து அதற்கேற்றவாறு நாம் நடந்துக்கொண்டால் நமக்கு ஏதும் பாதிப்புகள் ஏற்படாது. சின்ன வண்டிகளை வைத்திருப்பபவர்கள் பெரிதும் பாதிக்கப்படமாட்டார்கள். ஆனால் கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தான் சில சட்டங்களில் மாட்டிக்கொள்வார்கள்.
நாம் நிறைய முறை லாரிக்கள் அல்லது பெரிய பெரிய வாகனங்களில் நிறைய சுமை ஏற்றிக்கொண்டு போவதை பார்த்திருப்போம். நமக்கே வியப்பாக இருக்கும் எப்படி இவ்ளோ கனத்தை வச்சிக்கிட்டு இந்த வண்டிய ஓட்டிட்டு போறாங்கனு. இப்படி ஓட்டும்போது அதிக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்காக கொண்டுவந்தது தான் இந்திய மோட்டார் வாகன சட்டம் 113/194, இதனை பற்றிய முழு தகவல்களை கீழே பார்த்து தெரிந்துக்கொள்வோம்.
இந்திய மோட்டார் வாகன சட்டம் 113/194 (1)
ஒவ்வொருவிதமான மோட்டார் வாகன குற்றத்திற்கும், ஒவ்வொரு சட்டம் உள்ளது. இங்கே நாம் பார்க்க போவது Motor Vehicle Act 113/194, இந்த சட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டதென்றால் வாகனங்களில் அதிக சுமை ஏற்றினால் இந்த சட்டமானது பிறப்பிக்கப்படும்.
இந்த பிரிவுகளின் விதிகளை மீறி மோட்டார் வாகனத்தை ஓட்டுபவர் அல்லது மோட்டார் வாகனத்தை ஓட்டுவதற்கு காரணமானவர் அபராத தொகைகை கட்டி தான் வண்டியை எடுக்க முடியும். Spot Fine-ஆகா இருபதாயிரம் ரூபாய் மற்றும் ஒவ்வொரு டன்னுக்கும் இரண்டாயிரம் ரூபாய் கட்டவேண்டும்.
கொள்ளையடித்தால் இதுதான் தண்டனையாம்
Motor Vehicle Act 113/194 Fine
இதுவரை மேலே கொடுக்கப்பட்டுள்ள தொகையைத்தான் வட்டார போக்குவரத்து அதிகாரி, (ஆர்டிஓ) அபராத தொகையாக வாங்கிக்கொண்டிருந்திர்கள். ஆனால் இந்த அபராத தொகையானது சற்று மாற வாய்ப்புள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சுமை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- வாகன உரிமையாளரின் அபராத தொகை: ₹20,000
- சரக்கு அனுப்புபவருக்கு: ₹20,000
- சரக்கு பெறுபவருக்கு: ₹20,000
- வாகனம் ஓட்டுபவருடைய ஆறு மாத காலம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
ஆகா மொத்தம் ரூபாய் 60,000 வசூலிக்கப்படலாம் என்று செய்தி வெளியாகியுள்ளதாக பரவலாக பேசப்பட்டுவருகிறது.
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |