பொது சிவில் சட்டம் என்றால் என்ன.?

Advertisement

Pothu Civil Sattam Enral Enna

வணக்கம் நண்பர்களே. நாம் அனைவரும் தெரிந்துகொள்ளக்கூடிய சட்டங்களில் முக்கியமான சட்டமான பொது சிவில் சட்டம் பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க. பொதுவாக இந்தியர்கள் அனைவரும் நாட்டில் உள்ள சட்டங்களை பற்றி  தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அப்படி நாம் தெரிந்துகொள்ளும் சட்டங்களில் ஒன்றுதான் பொது சிவில் சட்டம்.

பொது சிவில் சட்டம் என்றால் என்ன.? ஏன், பொது சிவில் சட்டம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது என்ற எண்ணம் நம் அனைவருக்குமே இருக்கும். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் பொது சிவில் சட்டம் என்றால் என்ன.? ஏன், பொது சிவில் சட்டம் பிரபலம் அடைந்து வருகிறது உள்ளிட்ட பல விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம் வாருங்கள் படித்து தெரிந்துகொளலாம் வாங்க.

What is Uniform Civil Code in Tamil:

பொது சிவில் சட்டம் என்பது, ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்கள் ஆகும்.

இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனை சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் வகையில், உரிமையியல் சட்டங்கள் அல்லது சிவில் சட்டங்கள் மட்டும் மதம் மற்றும் கலாச்சாரத்திற்கேற்ப மாறுபடும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், இந்தியாவில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் ஆகியோருக்கு அவர்களின் மத அடிப்படையில் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் தனித்தனியான சட்டங்களை கையாண்டு வருகின்றனர். அவ்வாறு சட்டங்கள் தனித்தனியாக இருப்பதால் நிா்வாகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துவதாக மத்திய அரசு கூறுகிறது. இந்தியாவில் கோவா மட்டுமே பொது உரிமையியல் சட்டத்தை பின்பற்றி வருகிறது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 109

பொது சிவில் சட்டம்

1949 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 44-இல் பரிந்துரை செய்தது.ஆனால் இது வரை இந்திய அரசு பொது உரிமையியல் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொது சிவில் சட்டத்தை கொண்டு அமல்படுத்த உச்சநீதிமன்றம் இந்திய அரசுக்கு கருத்து தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், முன்னாள் இந்திய குடியரசு தலைவரான அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கும் பொது சிவில் சட்டத்தை வரவேற்றார். இருந்தாலும், இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த பல்வேறு இடையூறுகள் உள்ளது.

நாட்டில் உள்ள எல்லாம் மக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டங்களை வகுக்க அரசுகள் முயற்சிக்க வேண்டுமென அரசமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு வலியுறுத்துகிறது. அதன் அடிப்படையில், நாட்டில் பொது சிவில் சட்டத்தை செயல்ப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறது.

பனை மரத்தை வெட்டினால் என்ன தண்டனை தெரியுமா?

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement