NDPS சட்டத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள் NDPS Act in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. தினமும் ஒரு சட்டத்தை பற்றி நாம் அறிந்து வருகிறோம் அந்த வகையில் இன்று நாம் தெரிந்து கொள்ள இருப்பது NDPS Act பற்றியது தான். இது என்ன சட்டம், எந்த குற்றத்திற்கு இந்த சட்டம் விதிக்கப்படுகிறித்து, குற்றம் செய்தவருக்கு இந்த சட்டத்தின் மூலம் என்ன தண்டனை வழங்கப்படுகிறது என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
போதைப்பொருள் தடுப்புச் சட்டம் என்றால் என்ன?
இது போதைப்பொருள் தடுப்புச் சட்டமாகும். இந்த சட்டத்தி தெரிந்துகொள்வதற்கு முன்பு போதை பொருளை பற்றி தெரிந்துகொள்வோம்.
உலக அளவில் ஆப்கானிஸ்தான் தான் போதைப்பொருள் தயாரிப்பதில் முதல் இடத்தில் இருக்கிறது என்று சொல்ராங்க. அதுமட்டும் இல்லாமல் மெக்சிகோ போதை பொருளின் தலை நகரம் என்றும் சொல்ராங்க.
ஏன் என்றால் அங்கு போதை பொருட்கள் நிறைய புழக்கத்தில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இது உலக அளவில் சொல்லப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை இந்த போதைப்பொருள் என்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது கஞ்சா, அபின், ஹெராயின், பிரவுன் சுகர், கொக்கைன் போன்ற பொருட்கள் இந்தியாவில் தடை செய்துள்ளனர்.
இதற்காக இந்தியாவில் ஒரு சட்டத்தியும் இயற்றி உள்ளனர். 1985 ஆண்டு போதைப்பொருள் தடுப்பு சட்டம் NDPS என்ற ஒரு சட்டத்தை இந்தியாவில் இயற்றியுள்ளனர்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
மோசடியான ஆவணங்களை தயாரித்தால் இது தான் தண்டனையாம்..!
இந்த சட்டத்தில் என்ன விஷயங்களை செய்ய கூடாது?
இந்த சட்டத்தில் போதைப்பொருள் தயாரித்தல், போதைப்பொருள் கடத்தல், போதை பொருளை விற்றல், போதை பொருளை பதுக்கி வைப்பது மற்றும் போதை பொருளை பயன்படுத்துவது இந்த அனைத்திற்கும் இந்த சட்டத்தில் குற்றம் என்று சொல்லப்படுகிறது.
தண்டனை – NDPS Act Punishment in Tamil
இந்த NDPS சட்டத்தின் தண்டனை என்னவென்றால் சட்டப்பிரிவு 31-ஏ -யில் என்ன சொல்றாங்கன்னா அதிகப்படியாக மரண தண்டனை கூட கிடைக்கும் என்று சொல்ராங்க.
இந்த குற்றத்தில் சிக்கியவர்களுக்கு ஜாமின் கிடைக்குமா?
மற்ற சட்டங்களில் ஒரு காவல் அதிகாரி ஒரு குற்றத்திற்காக ஒரு நமரை கைது செய்கிறார்கள் என்றால் காவல் அதிகாரியே அந்த நபரை ஜாமினில் விடிவிக்கக்கூடிய நிலையம் இருக்கிறது. அவ்வாறு இல்லை என்றால் நிதி மாற்றத்தின் மூலம் ஜாமின் பெற்று விடுவிக்கலாம். அவ்வாறும் இல்லை என்றால் காவல் துறை உயர்த்திகர்கள் மூலமும் ஜாமின் பெற்று விடுவிக்கலாம்.
ஆனால் NDPS என்று சொல்ல கூடிய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்படுகிறார்கள் என்றால் அவரை ஜாமினில் விடுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் என்று சொல்ல முடியாது.
ஏன் என்றால் அவர் கைது செய்யப்படும் போதே அவர் குற்றவாளி பட்டியலில் தான் அவர்கள் பார்க்கப்படுவார். ஆக அவருக்கு ஜாமின் கிடைப்பது என்பது மிக மிக கடினமான விசையம் ஆகும்.
180 நாட்களுக்குள் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். 180 நாட்களுக்கு குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றால் அந்த நபருக்கு ஜாமின் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இந்த போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது அது என்னவென்றால். இந்த சட்டத்தில் ஒரு போதை பொருளில் அளவை பொறுத்து தண்டனையின் அளவு அதிகரிக்கும். ஆனால் முன்னாடி எப்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றால் ஒரு போதை பொருளோடு இன்னொரு பொருளை சேர்த்து தான் அதனை விநியோகம் செய்வார்கள், அப்போது அந்த போதை பொருளுக்கான எடையை மட்டுமே கருதி வைத்து தண்டனை வழங்கி உள்ளனர்.
ஆனால் இந்த 2008 முதல் உச்சநீதி மன்றம் போதை பொருளுடன் எந்த பொருள் கலந்திருந்தாலும் அதனுடைய மொத்த எடையின் அளவில் தான் தண்டனை என்பது கிடைக்கும் என்று உச்சநீதி மன்றம் ஒரு திறப்பை அறிவித்தது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
மோசடியாக கையொப்பம் ஈட்டால் இது தான் தண்டனையாக கிடைக்குமாம்
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |