தகவல் அறியும் உரிமை சட்டம் கையேடு pdf

Advertisement

தகவல் அறியும் உரிமை சட்டம் கையேடு pdf – Right to Information Act in Tamil

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 இந்திய நாடாளுமன்றத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இதனை RTI என்று அழைப்பார்கள். இந்த சட்டம் குறித்த தகவலை இப்பொழுது நாம் அறியலாம் வாங்க.

இச்சட்டம் 2004 டிசம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2005 மே 11, அன்று, மக்கள் அவையிலும், 2005 மே 12, அன்று மாநில அவையிலும் நிறைவேற்றப்பட்டது. 2005 சூன், 15 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. 2005 சூன் 21, அன்று அரசுப் பதிவிதழில் வெளியிடப்பட்டு 2005 அக்டோபர் 12, அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள். ஒவ்வொரு நாளும், 4800க்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. சட்டம் தொடங்கிய முதல் பத்து ஆண்டுகளில் 17,500,000 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பொது சிவில் சட்டம் என்றால் என்ன.?

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள்:

  • வெளிப்படைத் தன்மை (Transparency)
  • பொறுப்புடைமை (Accountability)
  • ஊழலை கட்டுப்படுத்துதல்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் யாரைக் கட்டுப்படுத்தும்?

  • அரசு அலுவலகங்களையும் அரசு நிறுவனங்களையும்.

இந்த உரிமை யாருக்கு உள்ளது?

  • இந்திய குடிமக்கள் ஒவ்வவொருவருக்கும் இந்த உரிமை உள்ளது.

தகவல் பெறும் உரிமையில் வேறென்ன அடங்கும்?

  • மாதிரிகள், சிற்றுருக்கள் (Samples, Models)
  • மின்னணுபடிவத்தில் உள்ள விவரம்
  • நிர்மாண பணியை பார்வையிடுதல்
  • ஆவணத்தையோ, பதிவேட்டையோ பார்வையிடுதல்

தகவல் கோரி விண்ணப்பம் செய்வது எப்படி?

  1. வேண்டிய தகவல் எந்த துரையின், எந்த அலுவலகத்தில் இருக்குமோ, அதற்குரிய பொதுத் தகவல் அலுவலருக்கு விண்ணப்பம் தர வேண்டும்.
  2. மனுவுடன் 10 ரூபாய் செலுத்த வேண்டும் மனுவிலேயே கோர்ட் வில்லை ஒட்டி அனுப்புவது எளிதான முறை ஆகும்.
  3. கோர்ட் வில்லை ஒட்டப்பட்ட மனுவின் ஒளிநகல் (Photocopy) எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.
  4. ஏழ்மை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை ஆனால். ஏழ்மை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதற்கான சான்றிதழ் இணைத்து அனுப்ப வேண்டும். நேரிலோ தபால் மூலமாகவோ மனுவை அனுப்பலாம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழ் கொடுக்கப்பட்டுள்ள PDF-ஐ டவுன்லோடு செய்யுங்கள்.

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement