வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மிருகங்களை கொன்றால் இதுதான் தண்டனை..!

Updated On: January 31, 2024 4:35 PM
Follow Us:
428 to 430 IPC in Tamil
---Advertisement---
Advertisement

428 to 430 IPC in Tamil

இன்றைய சூழலில் அதிகரித்துள்ள குற்றங்களை குறைப்பதற்காக உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தங்களின் சட்ட ஒழுக்கத்தை பாதுகாப்பதற்காக சட்டங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதே போல் தான் நமது இந்தியா நாட்டிலும் நடக்கும் அநீதிகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பற்றிய சரியான புரிதல் இருக்கின்றதா என்றால் நம்மில் பலருக்கும் கிடையாது.

அதனால் தான் உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒவ்வொரு வகையான தண்டனை சட்ட பிரிவுகளின் விளக்கத்தினை பொதுநலம்.காம் பதிவில் கூறப்பட்டு வருகின்றன. அதே போல் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 428, 429 மற்றும் 430 பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த சட்ட பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் அந்த குற்றங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

மோசடியான ஆவணங்களை தயாரித்தால் இது தான் தண்டனையாம்

IPC 428 in Tamil:

ஒரு நபர் ஒரு விலங்கினை அல்லது விலங்குகளையோ விஷம் வைத்து கொன்று, அல்லது ஊனமாக்கி அதற்கு தீங்கு விளைவித்தல் சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றத்தினை புரிபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

IPC 429 in Tamil:

ஐம்பது ரூபாய் அல்லது அதற்கு மேலும் மதிப்புள்ள யானை, ஒட்டகம் குதிரை, கோவேறு கழுதை, எருமை, மாடு அல்லது பசு ஆகியவற்றை விஷம் வைத்து கொன்று, அல்லது ஊனமாக்கி அதற்கு தீங்கு விளைவித்தல் சட்டப்படி குற்றமாகும்.

இந்த குற்றத்தினை புரிபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

IPC 430 in Tamil:

யாரோ ஒரு நபர் விவசாயத்திற்கோ, மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ அளிக்கப்படும் நீர் விநியோகத்தை குறைப்பதன் மூலம் தீங்கு விளைவிகிறார் என்றால் அவர் சட்டப்படி குற்றவாளி ஆவார்.

இந்த குற்றத்தினை புரிபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

மோசடியாக கையொப்பம் ஈட்டால் இது தான் தண்டனையாக கிடைக்குமாம்

ஒருவரை ஏமாற்றினால் இதுதான் தண்டனையாம்

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now