IPC 393 and 394 in Tamil
இன்றைய சூழலில் அதிகரித்துள்ள குற்றங்களை குறைப்பதற்காக உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தங்களின் சட்ட ஒழுக்கத்தை பாதுகாப்பதற்காக சட்டங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதே போல் தான் நமது இந்தியா நாட்டிலும் நடக்கும் அநீதிகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பற்றிய சரியான புரிதல் இருக்கின்றதா என்றால் நம்மில் பலருக்கும் கிடையாது.
அதனால் தான் உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒவ்வொரு வகையான தண்டனை சட்ட பிரிவுகளின் விளக்கத்தினை பொதுநலம்.காம் பதிவில் கூறப்பட்டு வருகின்றன. அதே போல் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 393 மற்றும் 394 பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த சட்ட பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
இந்திய நாட்டிற்கு எதிரான சட்டவிரோதமான செயலை செய்தால் தண்டனை கிடைக்கும்
IPC 393 in Tamil:
ஒரு நபர் மற்றொரு நபருக்கு சொந்தமான பொருளை அல்லது சொத்தினை அவரின் அனுமதி இல்லாமல் பறிப்பது கொள்ளையடித்தல் எனப்படும். இது குற்றமாகும். இந்த கொள்ளை குற்றத்தை செய்பவர் அல்லது முயற்சிப்பவர் குற்றத்திற்கு உரியவர் ஆவர்.
இத்தகைய குற்றத்தை புரிந்தவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
IPC 394 in Tamil:
பொதுவாக கொள்ளையடிக்கும்போது அல்லது கொள்ளையடிக்க முயற்சி செய்யும் போது கொள்ளையடித்த நபர் அல்லது அவருடன் அந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களினால் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் அல்லது காயத்தை ஏற்படுத்தினால் அது குற்றமாகும்.
இந்த குற்றத்தை புரிந்தவருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவல் அத்துடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
திருடினால் அல்லது ஒருவரை மிரட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்குமாம்
ஒருவர் குற்றம் செய்தால் 10 பேருக்கு தண்டனையா
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |